உள்கட்டமைப்பு திட்டங்களின் தடைகளுக்கு தீர்வாக ‘பிரகதி இணையதளம்’!

Dinamani2f2024 12 022fv0cjtlpy2fscreenshot 2024 12 02 232607.png
Spread the love

நாட்டின் உள்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஏற்படும் தடைகளைத் தீர்க்கும் தீர்வாக பிரகதி இணையதளம் உருவெடுத்துள்ளதாக ஆக்ஸ்போர்ட் வணிகப் பள்ளி கள ஆய்வில் தெரியவந்துள்ளது.

மத்திய அரசு அறிமுகம் செய்யும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் உரிய நேரத்தில் முறையாக செய்து முடிக்கப்படுவதை உறுதிப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு அறிமுகம் செய்த “பிரகதி (ஆக்கபூர்வ நிர்வாகம் மற்றும் விரைவான நடைமுறை)’ என்ற வலைதளத்தின் செயல்பாடு குறித்த ஆய்வை “கேட்ஸ்’ அறக்கட்டளை ஆதரவுடன் ஆக்ஸ்போர்ட் வணிகப் பள்ளி மேற்கொண்டது.

பெங்களூரு ஐஐஎம் (இந்திய மேலாண்மை நிறுவனம்) நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த கள ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் கூறியிருப்பதாவது:

மாநில தலைமைச் செயலாளர்கள், மத்திய அமைச்சகங்களின் அதிகாரிகளுடன் மாதம் ஒரு முறை நடைபெறும் கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் நேரடி பங்கேற்பு பிரகதி தளத்தின் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கிறது. குறிப்பாக, எண்ம (டிஜிட்டல்) கண்காணிப்புடன் இணைந்து, பொறுப்புணர்வு தொடர்பான புதிய கலாசாரத்தை பிரகதி வலைதளம் உருவாக்கியுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகள், புதிய விமான நிலையங்கள் அமைத்தல் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களின் விரைவான செயல்பாட்டுக்கு இந்த தளம் உதவியாக அமைந்துள்ளது. உதாரணமாக, நிலம் கையகப்படுத்துதல், சுற்றுச்சூழல் அனுமதி பெறுதல் ஆகியவற்றில் ஏற்படும் தேவையற்ற தாமதத்தைத் தவிர்க்க இந்த வலைதளம் உதவுகிறது; சமூக மேம்பாட்டுத் திட்டங்களை விரைவுபடுத்தவும் உதவுகிறது.

மக்கள் குறைகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் கால அளவை 32 நாள்களிலிருந்து 20 நாள்களாக குறைய இந்த வலைதளம் உதவுகிறது என ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *