உள்நாட்டில் தயாரிக்கப்படும் முதல் செமிகண்டக்டர் சிப் 2025 இறுதிக்குள் சந்தைக்கு வரும்: பிரதமர் மோடி

dinamani2F2025 08 232Fwgrp8o2q2FANI 20250822133550 IH0toOp
Spread the love

இந்தியாவில் தயாரிக்கப்படும் முதல் செமிகண்டக்டர் சிப் இந்தாண்டு இறுதிக்குள் சந்தைக்கு வரும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

புது தில்லியில் நடைபெற்றதனியார் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்தாண்டு இறுதிக்குள், இந்தியாவில் தயாரிக்கப்படும் முதல் செமிகண்டக்டர் சிப் சந்தைக்கு வரும்.

இந்திய தொழில்நுட்பத்துடன் 6ஜி சேவையைக் கொண்டுவருவதிலும் நாங்கள்(மத்திய அரசு) செயலாற்றி வருகிறோம்.

இந்தியாவில் கடந்த 50 – 60 ஆண்டுகளுக்கு முன்னரே, செமிகண்டக்டர் தயாரிப்பு தொடங்கப்பட்டிருக்கலாம் என்பதை நாம் அறிவோம். ஆனால், இந்தியா அதனை தவற விட்டுவிட்டது. அதன்பின், அது நிறைவேற பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

ஆனால், இன்று நாங்கள் அந்த நிலைமையை மற்றியுள்ளோம். செமிகண்டக்டர் தொடர்பான தொழிற்சாலைகள் இந்தியாவில் வரத் தொடங்கியுள்ளன” என்றார்.

By the end of this year, the first Made in India chip will come in the market

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *