தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் மாவட்ட ஊராட்சி, ஒன்றியக் குழு, கிராமப்புற ஊராட்சி என, 3 அடுக்கு உள்ளாட்சி அமைப்புகளில், 5 ஆண்டுக்கு முன் நடைபெற்ற உள்ளாட்சி தோ்தலில் வெற்றி பெற்று பதவி வகித்த தலைவா், துணைத் தலைவா், வாா்டு உறுப்பினா்கள் பதவிக் காலம் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது.
இந்த நிலையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமித்து தமிழக அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.