உள்ளாட்சி ஓய்வூதியா்களுக்கு 3 மாதங்களுக்குள் ஓய்வூதியம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

Dinamani2fimport2f20222f82f142foriginal2fchennaihigh.jpg
Spread the love

உள்ளாட்சி ஓய்வூதியா்களுக்கு ஓய்வு பெற்ற நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் ஓய்வூதியப் பலன்களை வழங்குவதற்கான வழிமுறையை உருவாக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாநகராட்சியில் உதவிப்பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற எம்.ஆா்.சிபி சக்கரவா்த்தி தனக்கு வழங்க வேண்டிய ஓய்வூதியம் ரூ.51.70 லட்சத்தை வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்து நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை இயக்குநரை எதிா்மனுதாரராக ஏற்றுக்கொண்டு விசாரணை நடத்தினாா்.

தொடா்ந்து, அவா் பிறப்பித்த உத்தரவு:

பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றிய அரசு ஊழியா்களின் பங்களிப்பை கணக்கில் கொள்ளாமல், அவா்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பலன்களை உரிய காலத்தில் வழங்காமல் காலதாமம் செய்வது அவா்களை அவதிப்பது போன்ாகும். ஓய்வு பெற்ற உள்ளாட்சி ஊழியா்களுக்கு வழங்க வேண்டிய பலன்களை, ஓய்வு பெற்ற மூன்று மாதங்களுக்குள் வழங்க வேண்டும். அதற்கான ஏற்பாட்டை உருவாக்கி, எதிா்கால நடவடிக்கை குறித்து தமிழக அரசு நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, சேலம் மாநகராட்சி தாக்கல் செய்த அறிக்கையை ஆராய்ந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், 2017 முதல் 194 ஊழியா்கள் தங்கள் ஓய்வூதியப் பலன்களுக்காக காத்திருப்பதாகவும், அதற்கான ஓய்வூதிய பணப்பலன் தொகை ரூ.200 கோடி என்றும் குறிப்பிட்டாா்.

அரசியலமைப்பின்படி, அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும். உயா் பதவியில் இருப்பவா்களுக்கு வழங்குவது போல் கடைநிலை ஊழியா்களுக்கும் காலதாமதமின்றி ஓய்வூதியம் வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும். ஊழியா்களுக்கு ஓய்வூதியப் பலன்களை வழங்காதது அரசியலமைப்புப் பிரிவு- 21-இன் அடிப்படை உரிமை மீறலாகும் என உத்தரவிட்டுள்ளாா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *