திங்கட்கிழமை காலையில் அலாரம் அடிக்கும்போது, அந்த அலாரத்தைத் தூக்கிப் போட்டு உடைக்க வேண்டும் போலத் தோன்றுகிறதா? ஆபீஸ் மீட்டிங்கில் பாஸ் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருக்கும்போது, “எப்படா இதெல்லாம் முடியும்… பேசாம ஊருக்குப் போய் நிம்மதியா ஒரு டீக்கடை வைக்கலாம்” என்று மனதுக்குள் ஒரு பகல் கனவு ஓடுகிறதா? 30 வயதைத் தாண்டிய பலருக்கும் இந்த “கடுப்பு’ சகஜம்தான் பாஸ்!
ஆனால், இந்த வேடிக்கையான பகல் கனவை ஓரம்கட்டிவிட்டு நிஜத்தைப் பார்ப்போம். கொஞ்சம் அதிர்ச்சியான உண்மை என்ன தெரியுமா? நீங்கள் இப்போது இரவு பகலாக உழைத்துக்கொண்டிருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு, உங்களின் பல வருட அனுபவத்தை விட, உங்கள் ‘சம்பளம்’ தான் கண்ணை உறுத்துகிறது. “இவருக்கு இவ்வளவு சம்பளம் கொடுப்பதற்குப் பதிலாக, அதே காசில் இரண்டு இளைஞர்களை வேலைக்கு எடுக்கலாமே!” என்றுதான் அவர்கள் கணக்குப் போடுகிறார்கள். 2025-ல் வெளியான ஒரு ஆய்வின்படி, இந்தியாவில் 30 முதல் 45 வயதுக்குட்பட்ட அலுவலகப் பணியாளர்களில் 60%-க்கும் அதிகமானோர் எப்போது வேலை போகுமோ என்ற அதீத மன அழுத்தத்துடனும், துளியும் மகிழ்ச்சி இல்லாமலுமே இயந்திரம் போல வேலை செய்கிறார்கள்.
இதை நினைக்கும்போதே உள்ளூர ஒரு பயம் குடலை உருட்டுகிறதா? “வேலையை விட்டால் ஈஎம்ஐ யார் கட்டுவது? பசங்க படிப்புச் செலவுக்கு என்ன செய்வது?” என்ற நடுக்கம்தான் உங்களை அந்த நாற்காலியில் கட்டிப் போட்டிருக்கிறது. எந்நேரமும் வேலை போய்விடுமோ என்ற தொங்கும் கத்தியோடு, உங்களுக்குப் பிடிக்காத ஒரு வேலையை 60 வயது வரை செய்யப் போகிறீர்களா? உங்களின் இளமை, ஆற்றல், சந்தோஷம் அனைத்தையும் ஒரு நிறுவனத்துக்காகத் தியாகம் செய்துவிட்டு, கடைசியில் பிபி, சுகர் என்று நோய்களுடனும், தளர்ந்த உடலுடனும் ரிட்டையர் ஆகி என்ன சாதிக்கப் போகிறீர்கள்?
ஒரு நிமிடம்… ஆழமாக மூச்சு விடுங்கள். இதிலிருந்து தப்பிக்க ஒரு அருமையான வழி இருக்கிறது! நீங்கள் 60 வயது வரை ஓட வேண்டிய அவசியமே இல்லை. ‘ஏர்லி ரிட்டையர்மென்ட்’ (Early Retirement) என்ற அற்புதமான வழியின் மூலம், அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளுக்குள் நீங்கள் இந்த வேலையிலிருந்து விடைபெறலாம். இதற்கு உங்களிடம் கோடிக்கணக்கில் பணம் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை; உங்கள் மனதில் ஒரு சின்ன மன மாற்றம் நடந்தால் போதும்.
இப்போது கண்களை மூடிச் சற்று கற்பனை செய்து பாருங்கள்! 45 வயதில் எந்தப் பணக்கவலையும் இல்லாமல், அலாரம் வைக்காமல் நிம்மதியாகத் தூங்கி எழுவது எவ்வளவு சுகமாக இருக்கும்? உங்களுக்குப் பிடித்த ஒரு தொழிலையோ, அல்லது உங்கள் சொந்த ஊரில் அமைதியாக விவசாயத்தையோ செய்துகொண்டு, குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்வது எவ்வளவு அருமையான வாழ்க்கை! பணத்துக்காக ஓடாமல், உங்கள் விருப்பத்துக்காக வாழும் அந்த சுதந்திரம் உங்களால் நிச்சயம் முடியும்.
ஆனால், இதை எப்படிச் சாத்தியமாக்குவது? எங்கிருந்து தொடங்குவது? இதற்கான தெளிவான வழிகாட்டுதலை வழங்கவே, வருகிற ஞாயிற்றுக்கிழமை உங்களுக்காக ஒரு பிரத்யேகமான ‘மாஸ்டர் பிளானிங்’ செஷன் (Master Planning Session) காத்திருக்கிறது. இது ஏதோ யூடியூபிலோ இணையத்திலோ கிடைக்கும் அரைகுறைத் தகவல்களைப் பேசும் சாதாரண விவாதம் அல்ல; பங்குச்சந்தை மற்றும் முதலீடுகள் பற்றிய உங்கள் பயங்களை உடைத்தெறிந்து, உங்களுக்கான நிதிச் சுதந்திரப் பாதையை வகுத்துக் கொடுக்கும் தெளிவான ‘ப்ளூபிரிண்ட்’ (Blueprint)!

இந்தச் சிறப்பு ஒர்க் ஷாப்பில் நீங்கள் நேரடியாகப் பெறப் போவது:
-
Early Retirement என்றால் என்ன?
-
விரைவாக ஓய்வு பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?
-
விரைவாக செல்வம் சேர்ப்பது எப்படி?
-
ரிட்டைர்மென்ட் பிளானிங் தவறுகள் + ஸ்மார்ட் பிளானிங் ரகசியங்கள்
சிறப்புப் பரிசு: இந்த ஒர்க் ஷாப்பில் முழுமையாகக் கலந்துகொள்ளும் அனைவருக்கும், இணையத்தில் கிடைக்கும் சாதாரண கால்குலேட்டர்களைப் போல இல்லாமல், உங்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ‘பிரீமியம் ரிட்டையர்மென்ட் கால்குலேட்டர்’ முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்!
உங்களின் நிதிச் சுதந்திரத்திற்கான பயணத்தை இன்றே தொடங்குங்கள்:
தலைப்பு: 60 வரை காத்திருக்க வேண்டாம்! – இயர்லி ரிட்டையர்மெண்ட் சிறப்பு ஒர்க் ஷாப்
நாள்: மார்ச் 22, 2026, ஞாயிறு
நேரம்: காலை 11 மணி – இந்திய நேரம்
பேச்சாளர்: N. வைத்தியநாதன், பர்சனல் ஃபினான்ஸ் நிபுணர் & நிறுவனர், Vai’s Pro-Active Finserve
மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனமான ‘லாபம்’ வழங்கும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கட்டணம் ஏதுமில்லை. அனுமதி முற்றிலும் இலவசம். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் 100 பேருக்கு மட்டுமே அனுமதி. முன்பதிவு கட்டாயம்.
ரெஜிஸ்டர் செய்ய: https://labham.money/events/webinar-mar22-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_mar22_2026