உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள சிக்கந்தராவ் நகர் புல்ராய் கிராமத்தில் சகர் ஹரிபாபாவின் சத்சங்கம் ஆன்மிக நிகழ்ச்சி நடந்தது.
கூட்ட நெரிசல்
சொற்பொழிவு முடிந்து ஒட்டுமொத்தமாக மக்கள் வெளியேறிய போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் விழுந்து விழுந்தனர்.
இதில் நெரிசலில் சிக்கி இதுவரை 120 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் காயம்அடைந்த 150 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
120 பேர் பலி
இந்த சத்சங்கம் நிகழ்ச்சியில் 15ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பலர் ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.பலியானவர்களின் பெரும்பாலும் பெண்கள் குழந்தைகள் உள்ளனர். இந்த சம்பவம் நாடுமுழுவதும்பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆன்மிக நிகழ்ச்சிக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதா? என்பது குறித்து அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரூ. 2 லட்சம் நிவாரண உதவி
இதற்கிடையே பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சமும், கயாம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணத்தொகையை மாநில முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்து உள்ளார். பலியானவர்களுக்குகுடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர்மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டு உள் ளஇரங்கல் செய்தியில், உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் நடந்த விபத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமான பக்தர்கள் உயிரிழந்த செய்தி நெஞ்சை பதற வைக்கிறது. குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று தெரவித்து உள்ளார்.
மோடி இரங்கல்
பிரதமர் மோடியில் இரங்கல் பதிவில், உ.பி.யில் உயிரிழந்தவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். மத்திய அரசு மாநில அரசுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்லா வகையிலும் உதவி செய்யப்படும் என்று உறுதியளிக்கிறேன் என்று தெரிவித்து உள்ளார். முன்னதாக பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றிக் கொண்டு இருந்த போது ஹத்ராஸ் விபத்து குறித்து கூறி வருத்தம் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார்.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில்‘உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் நடந்த விபத்து மிகவும் வேதனையளிக்கிறது. இந்த விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என்று கூறி உள்ளார்.
அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு
விபத்து தொடர்பாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறும்போது, நாங்கள் பாராளுமன்றத்தில் இருந்தபோது பலி தொடர்பான தகவல் எங்களுக்கு கிடைத்தது. இதுபோன்ற சம்பவம் நடந்தபோது அரசாங்கம் என்ன செய்து கொண்டிருந்தது என்பது கேள்விக்குறியாக உள்ளது.கூட்டநெரிசலில் சிக்கி ஏராளமானோர் உயிர் இழந்துள்ளனர். ஒரு நிகழ்ச்சிக்கு பெரும்பாலானோர் திரள்வார்கள் என்று அரசுக்கு தெரிந்தும் அவர்களின் பாதுகாப்பிற்கு என்ன செய்தார்கள் என்பது தெரியவில்லை. இது வருத்தமளிக்கிறது?. இந்த விபத்துக்கு அரசு தான் முழுப்பொறுப்பு .இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசுஉதவி செய்ய வேண்டும் என்றார்.
யோகி ஆதித்யநாத்
உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் நாளை(3ந்தேதி) ஹத்ராஸ் செல்ல உள்ளார்.அப்போது அவர் பலியானவர்களின் குடும்பத்தினருக்கும், காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் ஆறுதல் தெரிவிக்க உள்ளார்.
உதவி எண்கள்:
05722227041
05722227042
மேலும் படங்கள்….