உ.பி. மேலவை எதிர்க்கட்சித் தலைவராக சமாஜவாதி லால் பிஹாரி யாதவ் தேர்வு!

Dinamani2f2024 072fe1cd96a9 411b 4c1c B5fa E2924dd4bf9b2flal20bihari20yaadhav20edi.jpg
Spread the love

உத்தரப் பிரதேச மாநில மேலவை எதிர்க்கட்சித் தலைவராக சமாஜவாதி கட்சியின் லால் பிஹாரி யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சட்ட மேலவைத் தலைவர் குன்வார் மன்வேந்திர சிங், லால் பிஹாரி யாதவுக்கு மேலவை எதிர்க்கட்சித் தலைவராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இது குறித்து மேலவை செயலாளர் ராஜேஷ் சிங் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சமாஜவாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர செளத்ரி தெரிவித்துள்ளதாவது, ”சட்ட மேலவையின் தலைமை கொறடாவாக கிரண்பால் காஷ்யப் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று அஷுதோஷ் சின்ஹா கொறடாவாகவும், ஜாஸ்மீர் அன்சாரி மேலவையின் துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்” எனக் குறிப்பிட்டார்.

100 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் எதிர்க்கட்சித் தலைவராக குறைந்தபட்சம் 10 உறுப்பினர்களைப் பெற்றிருக்க வேண்டும்.

கடந்த மார்ச் மாதம் மேலவைக்கு நடைபெற்ற தேர்தலில் சமாஜவாதி கட்சி கூடுதலாக 3 உறுப்பினர்களைப் பெற்றதால், அவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. தற்போது ஆளும் பாஜகவுக்கு மேலவையில் 79 உறுப்பினர்கள் உள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *