உ.பி.யின் சம்பாலில் பதற்றம் தணிந்த நிலையில் மீண்டும் இணைய சேவை வழங்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு சம்பாலில் இணைய சேவை மீண்டும் தொடங்கப்பட்டன என்று மாவட்ட தகவல் அதிகாரி பிரிஜேஷ் குமார் தெரிவித்தார். ஷாஹி ஜாமா மஸ்ஜித் மற்றும் மாவட்டத்தின் பிற இடங்களில் வெள்ளிக்கிழமை தொழுகை அமைதியாக நடந்து முடிந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொழுகைக்கு முன்னதாக, ஜாமா மசூதியில் கூடுவதை விட அருகிலுள்ள மசூதிகளில் தொழுகை செய்யுமாறு குடியிருப்பாளர்களை மாவட்ட அதிகாரிகள் வலியுறுத்தினர். காவல்துறையினரைத் தவிர, நிலைமையைக் கண்காணிக்க மசூதியைச் சுற்றி கூடுதல் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன.
மேலும் கண்காணிப்பை அதிகரிக்க ஆளில்லா விமானங்களும் பயன்படுத்தப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பல் மாவட்டத்தில் ஜாமா மசூதி அமைந்துள்ள சா்ச்சை இடத்தில் பாரம்பரிய ஹிந்து கோயில் பிரதானமாக இருந்ததாகவும், 1529-இல் முகலாய பேரரசா் பாபா் கோயிலைப் பகுதியாக இடித்து, மசூதியைக் கட்டியதாகவும் கூறப்படுகிறது.