உத்தர பிரதேசத்தில் தகர கொட்டகையில் இருந்து ரயில் எஞ்சின் மீது குதித்த நபர் மின்சாரம் தாக்கி பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், ராணி லட்சுமிபாய் ரயில்வே சந்திப்பின் நடைமேடை1இல் கோவா எக்ஸ்பிரஸ் செல்லும் ரயில் வெள்ளிக்கிழமை இரவு நின்றுள்ளது.
இந்த நிலையில் நடைமேடையில் கட்டப்பட்டிருந்த தகரக் கொட்டகையில் இருந்து ரயில் எஞ்சின் மீது சுமார் 40-45 வயதுடைய ஒருவர் திடீரென குதித்துள்ளார்.