உ.பி.: ரெளடியின் ரூ.50 கோடி சொத்தை அரசுடைமையாக்க உத்தரவு

Dinamani2fimport2f20222f122f242foriginal2fcourt Order Pti.jpg
Spread the love

இதுதொடர்பாக மாவட்ட அரசு வழக்குரைஞர் (குற்றவியல்) குலாப் சந்திர அக்ரஹாரி கூறியதாவது: படுகொலை செய்யப்பட்ட தாதா அடிக் அகமது மீதும், அவரது சகோதரர் அஸ்ரஃப் மீதும் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஏப். 15 ஆம் தேதி இவர்கள் இருவரும் போலீஸார் காவலில் விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வந்தபோது எதிரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

படுகொலை செய்யப்பட்ட அடிக் அகமது, ஹூபலால் என்பவரின் பெயரில் ரூ. 50 கோடி மதிப்பிலான 2.377 ஹெக்டேர் நிலத்தை வைத்திருந்தார். அவர் படுகொலை செய்யப்பட்ட பிறகு காவல் துறை நடத்திய விசாரணையில் ஏர்போர்ட் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் வசிக்கும் ஹுபலால் பெயரில் ரூ. 50 கோடி மதிப்பிலான நிலம் பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

பின்னர் ஹூபலாலிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், 2015-இல் அடிக் அகமது மிரட்டி தனது பெயரில் இந்த நிலத்தை எழுதி வைத்ததாகவும், எப்போது வேண்டுமானாலும் இந்த நிலத்தை பெற்றுக் கொள்ளவதாகவும் தெரிவித்தார் என்று கூறினார். இதையடுத்து அந்த நிலத்தை போலீஸôர் 2023-இல் கையகப்படுத்தினர். நிலத்தை கையகப்படுத்தியது தொடர்பாக ஏதும் ஆட்சேபணைகள் இருந்தால் மூன்று மாதங்களுக்குள் தெரிவிக்கவும் மாநகர காவல் ஆணையரகம் அவகாசம் வழங்கியது. எனினும், அந்த நிலத்துக்கு யாரும் சொந்தம் கோரி உரிய ஆதாரங்கள் தாக்கல் செய்யவில்லை.

இதையடுத்து, மாநகர காவல் துறை ஆணையரகம் சார்பில் பிரயாக்ராஜ் குண்டர் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிபதி வினோத் குமார் செüராசியா, மாநகர காவல் ஆணையரகத்தின் செயலைப் பாராட்டியதோடு கையகப்படுத்திய நிலத்தை அரசுக்கு சாதகமாக்க உத்தரவிட்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *