பட மூலாதாரம், Getty
விளையாட்டுத்துறையில் ஊக்கமருந்து பயன்பாட்டை மேலும் தடுக்க, முதல் முறையாக இரண்டு வாயுக்களை தடை செய்யப்பட்டுள்ள பட்டியலில், வாடா எனும் ஊக்க மருந்து பயன்பாட்டுக்கு எதிரான சர்வதேச அமைப்பு சேர்த்துள்ளது.
‘அரிதான வாயுக்கள்’ என்று அறியப்படும் ஆர்கான் மற்றும் ஜெனான் ஆகிய இருவாயுக்களுமே இப்படியலில் இணைக்கப்பட்டுள்ளன.
பல ஆண்டுகளாக ரஷ்யா இந்த இரண்டு வாயுக்களையும் தமது விளையாட்டு வீரர்களின் திறமையை அதிகரிக்கும் வகையில் பயன்படுத்தியது என்று வாடா குற்றஞ்சாட்டுக்கிறது.
பட மூலாதாரம், Thinkstock
ஆர்கான் மற்றும் ஜெனான் வாயுக்கள் உடலுக்குள் செலுத்தப்படும்போது, அவர சிவப்பு ரத்த அணுக்களை அதிகரிக்கச் செய்து, அதன் மூலம் உடலுக்கு, இயற்கைக்கு முரணான வகையில் வலுசேர்க்கிறது என்று வாடா வாதிடுகிறது.
இந்த இரண்டு வாயுக்களும் பெரும்பாலும் தொழில்துறையிலேயே பயன்படுத்தப்படுகின்றன. ஆர்க் வெல்டிங் மற்றும் நியான் பல்புகள் ஆகியவற்றில் இவைகளின் பயன்பாடுகள் உள்ளன.
தற்போது வாடா இந்த இருவாயுக்களையும் தடை செய்யப்பட்டுள்ள பட்டியலில் இணைத்துள்ளது குறித்து, சென்னையிலுள்ள விளையாட்டு மருத்துவ வல்லுநர் டாக்டர் கண்ணன் புகழேந்தி பிபிசி தமிழோசைக்கு அளித்த பேட்டியை இங்கே கேட்கலாம்.