இந்தியாவில் பிரதமர் நரேந்திரமோடியின் அரசாங்கம், ஜனநாயகத்துக்கு எதிராக செயல்பட்டு, ஊடகங்கள் தகவல் பெறுவதைக் கட்டுப்படுத்துகிறது என முன்னணி இந்திய செய்தித்தாள்களின் பலவற்றின் ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பட மூலாதாரம், AFP
அமைச்சர்கள், அதிகாரிகள் போன்றோரை பத்திரிகையாளர்கள் அணுக முடிவதென்பதையும் தகவல் பெறுவதென்பதையும் மோடியின் நிர்வாகம் கட்டுப்படுத்துகிறது என எடிட்டர்ஸ் கில்ட் ஒஃப் இந்தியா எனும் இந்திய செய்தி ஆசிரியர்கள் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியிடுவது என்பதிலும், தலைமையில் உள்ளவர்களே முதலில் செய்ய முடியும், அதையே கீழுள்ளவர்கள் பின்பற்ற வேண்டும் என்பதுபோன்ற போக்கை மோடி அரசு கடைப்பிடிப்பதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கூடுதலான வெளிப்படைத்தன்மையும், விவாதமும், கருத்துப் பரிமாற்றமும் தேவை என அந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.