‘ஊடகம்தான் மக்களாட்சியை உயிர்ப்போடு வைத்திருக்கும் ஆற்றல்’ – முதல்வர் ஸ்டாலின் | Media is the power that keeps democracy alive Chief Minister Stalin

Spread the love

சென்னை: “ஊடகம்தான் மக்களாட்சியை உயிர்ப்போடு வைத்திருக்கும் ஆற்றலாக விளங்க வேண்டும்.” என்று தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “எந்த ஒரு மக்களாட்சியிலும், தன்னாட்சி அமைப்புகள் அதிகாரத்தில் உள்ளவர்களால் கைப்பற்றப்பட்டாலும், ஊடகம்தான் மக்களாட்சியை உயிர்ப்போடு வைத்திருக்கும் ஆற்றலாக விளங்க வேண்டும்.

ஒன்றிய பாஜக அரசின் எதேச்சாதிகாரத்துக்கு அடிபணியாமல் துணிவுடன் அவர்களது தோல்விகளையும் ஊழல்களையும் மோசடிகளையும் தோலுரிக்கும் ஊடகவியலாளர்கள் அனைவரையும் தேசிய பத்திரிகையாளர் நாளில் பாராட்டுகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *