குறிப்பாக கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருள்கள் விற்பனையில் அதிகளவில் ஈடுபட்டு வருகிறார்கள். பலர் கைதும் ஆகியிருக்கிறார்கள். இந்த நிலையில்தான், கேரள மாநிலத்தைச் சேர்ந்த கஞ்சா வியாபாரியிடம் இருந்து மொத்தமாக கஞ்சாவை வாங்கி நீலகிரியில் விற்பனை செய்து வந்த ஊட்டி போலீஸ் நசீர் அகமது என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்தக் கஞ்சா வியாபாரியிடம் இருந்து 17 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், பணி நேரத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களைப் பயன்படுத்தியதாக எருமாடு காவல் நிலையத்தைச் சேர்ந்த அபிசேகரன், கோத்தகிரி போலீஸ் மாயக்கண்ணன், மசினகுடி போலீஸ் சாந்தகுமார் ஆகிய 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கஞ்சா புழக்கத்தில் நீலகிரியில் பணியாற்றும் டிராஃபிக் மற்றும் சட்ட ஒழுங்கு காவலர்கள் சிலருக்குத் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.