ஊட்டி: கழிவறை இல்லாத கூலித் தொழிலாளர்கள் குடியிருப்பு; காட்டுமாடு முட்டி பெண் பலியான சோகம் | Ooty: Woman killed by wild cow in workers’ quarters without toilets

Spread the love

இந்தத் துயரம் குறித்து தெரிவித்த உள்ளூர் மக்கள், “கொதுமுடி ஹட்டி பகுதியில் படுகர் சமுதாய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பாலம் பகுதியில் 40-க்கும் அதிகமான கூலித்தொழிலாளர்களின் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

சொந்தமாக வீடற்ற இந்த மக்களுக்கான பொதுக்கழிவறைகள் கூட கிடையாது. பிளாஸ்டிக் பாட்டில், கேன் போன்றவற்றில் தண்ணீர் நிரப்பிக்கொண்டு கூனிக்குறுகியபடியே நாள்தோறும் வனப்பகுதிக்குள் சென்று இயற்கை உபாதைகளைக் கழித்து வருவார்கள்.

உயிரிழந்த மலர்க்கொடி

உயிரிழந்த மலர்க்கொடி

பெண்கள் பெரும்பாலும் காலை விடிவதற்கு முன்பும், மாலை இருட்டிய பிறகுமே செல்வார்கள். இன்று காலை விடிவதற்குள் மலம் கழிக்கச் சென்ற பெண்ணை காட்டுமாடு முட்டியதில் அங்கேயே சரிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

கூலித்தொழிலாளரான மலர்க்கொடியின் கணவர் மூட்டைச் சுமக்கும் வேலை செய்து வருகிறார்‌. இரண்டு ஆண் குழந்தைகளும் அரசுப் பள்ளியில் படித்து வருகிறார்கள். இனி யாருக்கும் இப்படி ஒரு துயரம் ஏற்படாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *