ஊட்டி: பகலில் இருள் சூழ்ந்து காணப்பட்ட நகரங்கள், பனி மூட்டத்தால் முடங்கிய போக்குவரத்து!-nilgiri heavy mist and drizzling .

Spread the love

குளிர்ந்த கடல் காற்று கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி வீசுவதால் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் மழைப்பொழிவு மற்றும் கடுமையான பனி மூட்டம் நிலவி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உறைபனி நிலவி வந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை முதல் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு பரவலாக மழைப்பொழிவு தொடர்ந்து வருகிறது.

பனி‌ மூட்டம்

பனி‌ மூட்டம்

அதிலும் குறிப்பாக ஊட்டி, குன்னூர், குந்தா, கோத்தகிரி ஆகிய பகுதிகளில் நேற்று காலை முதல் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. எதிரில் வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு அடர்த்தியான பனி மூட்டம் காணப்படுவதால் வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *