ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவகத்தில் அமைச்சுப் பணியில் ஈடுபட்டு வந்தவர் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயதான முருகன். அரசின் நிரந்தர பணியாளரான இவர், காவலர்களுக்கான பயணப்படி பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

இந்த நிலையில், வழக்கு தொடர்பாக வெளியூர் சென்று வந்த பெண் ஆய்வாளர் ஒருவர் பயணப்படிக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து முருகனிடம் கொடுத்துச் சென்றிருக்கிறார். இந்த நிலையில், அன்றைய தினம் இரவு புதிய செல்போன் எண்ணில் இருந்து வாட்ஸ் அப்பில் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் வந்திருக்கிறது. அதிர்ச்சியடைந்த அந்த பெண் ஆய்வாளர், சம்பந்தப்பட்ட எண் குறித்து புகார் அளித்திருக்கிறார்.