ஊத்து தேயிலைத் தோட்டம் அருகே உலாவிய யானைகள் தாக்கியதில் சிற்றுந்து நடத்துனருக்கு காயம் ஏற்பட்டது.
அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்குள்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இந்த தோட்டங்களில் பணிபுரியும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் குடும்பத்துடன் அங்கு வசித்து வருகின்றனர். தோட்டத் தொழிலாளர்களின் வசதிக்காக அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவில், பாபநாசம் பணிமனையிலிருந்து ஊத்துத் தேயிலைத் தோட்டத்திற்கு அகஸ்தியர் பட்டியைச் சேர்ந்த ஓட்டுநர் ராஜ்குமார் மற்றும் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த நடத்துநர் பாடலிங்கம் இருவரும் சிற்றுந்தை இயக்கியுள்ளனர்.
இரவு அங்கு தங்கி சனிக்கிழமை அதிகாலை சிற்றுந்தை இயக்குவதற்காக, அறையிலிருந்து சிற்றுந்தை நோக்கிச் சென்றுள்ளனர். இந்த நிலையில், இருட்டில் நின்றிருந்த இரண்டு காட்டு யானைகளைக் கவனிக்காமல் சிற்றுந்தை நோக்கிச் சென்றுள்ளனர்.