ஊழல் மற்றும் வாரிசு அரசியலுக்கு முடிவு: நேபாள பொதுத்தேர்தலில் இளைஞர் சக்தியின் அதிரடி எழுச்சி! | An end to corruption and nepotism: A dramatic rise of youth power in the Nepali general election!

Spread the love

நேபாளத்தில் கடந்த செப்டம்பர் மாதம் “ஜென் ஸீ’ (Gen Z) இளைஞர்கள் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து, கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரசு கவிழ்ந்தது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில், ராப் கலைஞராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பலேன் ஷாவின் (Balen Shah) ‘ராஷ்ட்ரிய ஸ்வதந்திர கட்சி’ (RSP) மிகப்பெரிய வெற்றிபெறும் எனக் கூறப்படுகிறது.

மொத்தம் உள்ள 165 தொகுதிகளில், 144 தொகுதிகளுக்கான தரவுகளின்படி, RSP கட்சி 3 இடங்களை வென்றுள்ளதுடன், 104 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

நேபாளி காங்கிரஸ் 2 இடங்களை வென்று 12 இடங்களில் முன்னிலையில் உள்ளது. சிபிஎன்-யுஎம்எல் (CPN-UML) 10 தொகுதிகளிலும், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி 6 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. காத்மாண்டுவின் 10 தொகுதிகளிலும் RSP கட்சியே முன்னிலை வகிக்கிறது.

காத்மாண்டுவின் மேயராக இருந்த 35 வயது பொறியாளர் பலேந்திர ஷா (பலேன்), ஜாபா-5 தொகுதியில் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலியை விடப் பன்மடங்கு அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *