'எங்களது தலைவரின் ரத்தத்திற்கு பழி வாங்காமல் விடமாட்டோம்' – ஈரான் கூறும் 'அமெரிக்கா'வின் பிளான்?

Spread the love

ஈரானின் உச்ச தலைவர்‌ இறந்து ஒரு வாரத்திற்கும் மேலாகிறது.

இன்னமும் அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் போர் தொடர்ந்து வருகிறது.

இந்தப் போர் இன்னும் நீளும் என்று அமெரிக்க அதிபர்‌ ட்ரம்ப் தொடர்ந்து சிக்னல் தந்து வருகிறார்.

இந்த நிலையில், இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) முன்னாள் தளபதி லாரிஜானி தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது…

“நாங்கள் எங்களுடைய தலைவர் மற்றும் மக்களின் ரத்தத்திற்கு பழி வாங்குவோம்.

இதற்கான விளைவை ட்ரம்ப் சந்திக்க வேண்டும்… சந்திப்பார்”.

லாரிஜானி
லாரிஜானி

பின், ஈரான் தேசிய தொலைகாட்சி பேட்டியில் லாரிஜானி, “ட்ரம்பை விடமாட்டோம். அவரது செயலுக்கான விளைவை அவர் சந்தித்தே ஆக வேண்டும்.

அவர் நமது தலைவர் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நமது மக்களைக் கொன்றுள்ளார்.

இது சாதாரண விஷயம் அல்ல.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானை உடைக்க பார்க்கிறது.

வெனிசுலாவில் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு பயந்துள்ளது போல ஈரானிலும் நடக்க வேண்டும் என்று அமெரிக்கா நினைக்கிறது” என்று பேசியுள்ளார்.

லாரிஜானியைப் பற்றி ட்ரம்பிடம் கேட்ட போது, அப்படி ஒருவரை தெரியாது. அவர் சொல்வதைக் கண்டுகொள்ள போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *