`எங்கள் இசை தான் அரசியல்!’- தம்மா த பேண்ட் குழுவினர்! | ‘Our music is the voice against oppression; our music is politics!’ – Thamma the Band members!

Spread the love

எங்களோட ஒவ்வொரு வார்த்தையும் எதிர்ல இருக்கிறவங்கள டிரிகர் பண்ணாம நாங்க பேசுற விசயங்களைப் பத்தி யோசிக்கணும்ன்னு நினைச்சு தான் எழுதுறோம். பாட்டுக்கான வரிகளை ஒருத்தர் மட்டும் எழுதுறதுனால ஒருத்தரோட ஐடியாலஜி மட்டும் திணிக்க வாய்ப்பிருக்கு. எல்லாருமே தனித்தனியா உட்கார்ந்து எழுதுவோம். அப்புறம் எல்லாத்தையும் ஒண்ணா சேர்த்து முழு பாட்டா உருவாக்குவோம். “

சந்தோஷினி

சந்தோஷினி

பெண் கலைஞர் சந்தோஷினி பேசத் தொடங்கினார்,

“ நாங்க எல்லாருமே வேலைக்கு போறவங்க தான். எங்களோட வருமானத்துல இருந்து கொஞ்சம் சேத்து வச்சிக்கிடுறோம். நந்தன் பெற்றோர்களான அனுரதா அம்மாவும், மாரியப்பன் அப்பாவும் தான் பெரிய நம்பிக்கையா எங்களோட நிக்கிறாங்க. எங்களோட பொருளாதார தேவைகளை அவங்களும் பாத்துக்கிடுறாங்க.

ஒவ்வொரு இடங்களில் நாங்க பாடும்போது கிடைக்கிற பணத்தை வச்சி எங்களோட செலவுகளை சமாளிச்சிக்கிடுறோம். எங்களுடைய இசைப்பயணம் முழுக்க போர், காலநிலை மாற்றம், சாதி ஒடுக்குமுறைன்னு அதிகார மையத்திற்கு எதிரான குரலா தொடர்ந்து பயணிச்சிட்டு இருக்கோம். அடங்குமுறைக்கு எதிரான மக்களோட கொண்டாட்ட வாழ்க்கை தான் எங்க இசை.

நிறைய கிராமங்களுக்குள்ள பயணிக்கனும். அவங்களுக்கு இந்த ஆர்ட் வழியான புரிதலை ஏற்படுத்தனும். இதை ஒரு பேண்ட் ங்கிறதோடு நின்னுற கூடாது அமைப்பாக கொண்டு போகனும்ன்னு ஆசை இருக்கு” என்றவர்கள் புதிதாக இசையமைத்த பாடலொன்றைக்கும் நமக்காக பாடி சியர்ஸோடு நிறைவு செய்தார்கள் தம்மா த பேண்ட் படைக்குழு.!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *