“எங்கள் கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்றுதான் அமித் ஷா சொன்னார்” – இபிஎஸ் மீண்டும் விளக்கம் | EPS explains on what Amit Shah said about government formation in TN

1369604
Spread the love

சிதம்பரம்: “தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்று அமித் ஷா சொல்லவில்லை. எங்கள் கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்றுதான் சொன்னார். எங்கள் கூட்டணியைப் பொருத்தவரை நான் சொல்வதே இறுதியானது.” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அமித் ஷா பேசியது என்ன? – கடந்த ஏப்ரல் 11-ம் தேதி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமித் ஷா, “பாஜக தலை​வர்​களும், அதி​முக தலை​வர்​களும் இணைந்து கூட்​ட​ணியை உரு​வாக்கி இருக்​கிறோம். வரும் 2026 சட்​டப்பேர​வைத் தேர்​தலை தேசிய ஜனநாயக கூட்​டணி (என்​டிஏ) கட்​சிகளு​டன் இணைந்து சந்​திக்க இருக்கிறோம். வரும் தேர்​தலின் போது தேசிய அளவில் பிரதமர் மோடி தலை​மை​யிலும், தமிழகத்​தில் அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தலை​மை​யிலும் போட்​டி​யிட இருக்​கிறோம்.

வரப்போகும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பாஜக – அ​தி​முக​வின் தேசிய ஜனநாயக கூட்​டணி பெரும்​பான்​மை​யான வாக்​கு​களை பெற்று ஆட்​சி​யமைக்​கும் என்​ப​தில் எனக்கு முழு நம்​பிக்கை இருக்​கிறது. பாஜக​வும், அதி​முக​வும் இணைந்துதான் தமிழகத்​தில் கூட்​டணி ஆட்​சியமைக்​கப் போகிறோம். அதி​முக பொதுச் ​செய​லா​ளர் பழனி​சாமி தலை​மை​யில்தான் கூட்​டணி இருக்​கும்.

அமைச்​சரவை குறித்து வெற்றி பெற்ற பிறகு முடிவு செய்​யப்​படும். எங்​களு​டன் கூட்​ட​ணி​யில் இணைந்​ததற்கு அதி​முக எந்​த​வித கோரிக்​கை​யும், நிபந்​தனை​யும் விதிக்​க​வில்​லை. அதி​முக​வின் உட்​கட்சி விவ​காரத்​தில் பாஜக​வின் தலை​யீடு ஒரு​போதும் இருக்​காது. கூட்​ட​ணி​யில் இணைவதன் மூலம் இருதரப்​புக்​குமே பலனிருக்​கிறது. யார் யாருக்கு எத்​தனை தொகு​தி​கள் என்​பதும், வெற்றி பெற்ற பிறகு ஆட்​சி​யில் எத்​தகைய பங்கு என்​பதும் பின்னர்தான் பேசப்​படும்” என்று அமித் ஷா பேசியிருந்தார்.

சர்ச்சைகளும் விளக்கமும்: அமித் ஷாவின் பேச்சை வைத்து இன்றுவரை அதிமுக பாஜகவிடம் தன்னை அடகுவைத்துவிட்டது, பாஜக தமிழகத்தில் மறைமுகமாக ஆட்சி அமைக்க முயற்சிக்கிறது என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இது குறித்து எடப்பாடி பழனிசாமியும் பலமுறை விளக்கம் கொடுத்துவிட்ட நிலையில், இன்றும் அதுபற்றி கேள்வி எழுப்பப்பட அவர் மீண்டும் விளக்கமளித்துள்ளார்.

சிதம்பரத்தில் இன்று செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த இபிஎஸ், “தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்று அமித் ஷா சொல்லவில்லை. எங்கள் கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்றுதான் சொன்னார். எங்கள் கூட்டணியைப் பொருத்தவரை நான் சொல்வதே இறுதியானது.” என்று விளக்கமளித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *