எங்க அப்பாரு! – சிறுகதை | My Vikatan author shares about small kids with different status

Spread the love

அட   எனககெதுக்கடா   இதெல்லாம். தம்பிக்கு குடு.கமர்கட்டும் தேன் மிட்டாயுங் கூட  வாங்கிட்டு வந்துடடியா ? கட்டிட்டு வான்னா வெட்டிட்டு   வர்ற குறும்பன்  நீ தாண்டா  

என்று கூறி விட்டு நீரவ் பக்கம் திரும்பி  வாங்கி சாப்பிடு  தம்பி… அப்பிடியே உனக்கென்ன கவலையின்னு இந்த

அப்பாருகிட்ட சொல்லு என்றார். அப்ப  நானும் உங்களை அ அப்பாருன்னு   கூப்பிடலாமா  என்று முகம்   மலரக்கேட்டான்  நீரவ்.

 தாராளமா உனக்குப் பிடிச்ச மாதிரி எப்பிடி வேண்ணாலும்  கூப்பிடு கண்ணூ என்றார்  அப்பாரு..

    ஒண்ணுமில்லை அப்பாரு. நீங்க  டெய்லி  ஈவ்னிங் வந்து இவனை கூட்டிட்டுப் போறீங்க… ஸ்நாக்ஸ் வாங்கி  கொடுக்கிறீங்க.. இவன்உங்க கையை பிடிச்சிட்டு  குதிச்சிட்டே  போறா ன். எனக்கு அப்படி யாருமே இல்லை… அதுதான்  இவனைப் பார்க்கும்போது   எல்லாம் ஏக்கமாக,பொறாமையாக இருக்குது  என்றான்.

நீரவ் அப்பாரு என்று அழைத்ததும் தன்னைப்பற்றி   பொறாமைப்பட்டதும் நல்லதம்பிக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.  இருந்தாலும் அப்பாரு முகத்துக்காக  பேசாமல் இருந்தான். 

ஏஞ்சாமி!  உங்க வீட்டுலே பெரியவங்க யாருமில்லையா? தாத்தா , பாட்டி, அப்பா அம்மால்லாம் என்ன பண்றாங்க  ,எங்கிருக்காங்க விவரமா சொல்லப்பா  என்றார்  அப்பாரு..

       அப்பா பிஸினஸ்  பண்றார். அம்மா லேடீஸ் கிளப், சோசியல்சர்வீஸ்,  யு டியூப்  மீடியா ன்னு  வெளியிலேயே இருப்பாங்க. தாத்தா  பாட்டி ரெண்டு பேரும் சீனியர் சிட்டிசன் வில்லாவில் இருக்காங்க.  

     சொல்லும்போதே அழுகை பொங்கி வந்து நீரவ் கண்களில் நீர் வழிந்தது..

  இதைக்கண்ட  நல்லதம்பிக்கு  அவன் மேலிருந்த எரிச்சல் மறைந்து பரிவும் அன்பும் மேலோங்கியது.

நீரவ் அருகில் நகர்ந்த அப்பாரு அவனைத் தன் மீது சாய்த்துக் கொண்டு  அழுவாதே கண்ணு! வீட்ல  உன்னைய யாரு பாத்துக்கறாங்க  என்று கேட்டார்.

      வீட்டில்  வேலைக்காரர்கள்  ,சமையல்காரர்கள்  டிரைவர்கள் எல்லாம் இருக்காங்க. பார்த்துப்பாங்க. இப்பக்கூட  டிரைவருக்காகத்  தான்  வெயிட்  பண்றேன்    என்றான் நீரவ்.

     உனக்கு   அண்ணா  தம்பி அக்கா தங்கச்சி அத்தை பெரியப்பா  பெரியம்மா சித்தப்பா  சித்தி அவங்களுடைய குழந்தைகள் யாருமே வீட்டுக்கு  வரமாட்டாங்களா நீயும் யார் வீட்டுக்கும் போகமாட்டியா என்று நல்லதம்பி கேட்டான்.

    ஊஹும்  ….  எங்க  மம்மி  ஒரே பொண்ணு.அந்தத் தாத்தா  பாட்டி   எப்பவும்  கோயில் யாத்திரை ன்னு டூர்லேயே  தான் இருப்பாங்க. அப்புறம் அப்பாவோட தங்கை அவங்க வெளி நாட்டுல  இருக்காங்க.. தாத்தா பாட்டியும்   ஹோம்லே. அவங்க  எங்க வீட்டுக்கு வர  எங்க மம்ம அலவ்   பண்ண மாட்டாங்க. 

பரிதாபமாக சொன்னான் நீரவ்.

எங்க வீட்டில் அப்படியில்லை.  சின்னவீடு தான். ஆனா நிறையப்பேர் இருக்கோம். எப்பவும் கூச்சலும் 

கும் மாளமும் சிரிப்பும்  சண்டையும் சமா தானமும் இருக்கும். அப்பாரும் அப்பத்தாவும் அடிக்கடி அதட்டிட்டும் புத்தி சொல்லிட்டும்  இருப்பாங்க..

இதை விட ஸ்கூல்  லீவ் விட்டா மாத்தி மாத்தி எல் லாரும்  கூட்டாக சேர்ந்து எல்லா சொந்தக்காரங்க  வீட்டுக்கும் போயிடுவோம்.. எல்லாப் பண்டிகைக்கும் திருவிழாக்கும் ஒன்னு கூடிடுவோம்.  ஒரே ஜாலி தான்  கேலிதான்..

      பெருமையாக  சொன்னான் நல்லதம்பி.

அவனை பேச வேண்டாம்  என அடக்கினார் அப்பாரு.

 நீரவ் கண்ணா நீ வருத்தப்படாதே.

அழுவாதே. 

 டிரைவர் வர்ற வரைக்கும் நாங்க கூடவே  இருக்கோம். இன்னைக்கு மட்டுமில்லே தினமுமே.. கண்ணைத் தொடச்சுக்கோ சந்தோஷமா இரு என்றார்.

      இல்ல அப்பாரு அடுத்தவாரம் என்னோட பெர்த் டே வருது. என்ன தான் பெருசா பார்ட்டி எல்லாம் வெச்சு  அமர்க்களப்படுத்தினாலும் என்னோட தாத்தா பாட்டி  சொந்தக்காரங்க  இல்லாமல் இருந்தா எனக்கு கஷ்டமாக  தானே இருக்கும்.

நீங்களும் நல்லதம்பியும் எனக்காக வர்றீங்களா  அப்பாரு  என்றான்நீரவ்.

மின்னல் வெட்டியது போல் ஒருபொறி தட்டியது  அப்பாருக்கு..

பெருசா பார்ட்டி கொண்டாடுவாங்களா உன் மேல அவ்வளவு பாசமா  அவங்களுக்கு?

  ஆமாங்க அப்பாரு.. நான் சிங்கிள் சைல்டு. என்கிட்ட   நிறைய அன்பு  உண்டு. ஆனால் என்னைக்  கூட  கவனிக்காமல்  ஓடிகிட்டே இருக்காங்க எனக்காக த் தான் இப்படி பாடுபடறோம் னு  சொல்வாங்க.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *