எச்சரிக்கை! மால்வேர் தாக்குதல்கள் படுமோசம்!

dinamani2F2024 052Fc709d890 ec70 4681 90b9 323b49068c8a2FC 1 1 CH1035 100112837
Spread the love

சைபர் மோசடியாளர்கள் பயன்படுத்தும் தாக்குதல்களில் மால்வேர் தாக்குதல் என்பது பயனர் பயன்படுத்தும் கணினி, செல்போன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனத்துக்குள் மென்பொருளை நுழைத்து தகவல்களை திருடுவது.

பயனருக்குத் தெரியாமல் அல்லது பயனரை ஏமாற்றி வேறு ஒரு பெயரில் மென்பொருளை பதிவேற்றி, அதன் மூலம் வங்கிக் கணக்கு எண், பாஸ்வேர்டு, மின்னஞ்சல் முகவரிகளைத் திருடுவார்கள்.

இதுபோன்ற மால்வேர் மென்பொருள் ஒரு கணினி அல்லது செல்போனுக்குள் பதிவிறக்கம் செய்யப்பட்டுவிட்டால், அதன் செயல்பாடுகள் வேறுபடும். இந்த மென்பொருளுடன் இணைக்கப்பட்டிருக்கும் கருவிக்கு, இதிலிருந்து தகவல்களை அனுப்பத்தொடங்கும்.

மின்னஞ்சலில் அனுப்பப்படும் லிங்குகள், மோசடியாளர்களின் இணையதளங்களுக்குள் செல்லும்போது, கணினியில், வெளியிலிருந்து நுழைக்கப்படும் தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் இந்த மென்பொருள் பதிவிறக்கம் செய்யப்படுகிறது.

மால்வேர் தாக்குதல்கள் பல வகைகளில் நடத்தப்படுகின்றன.

வைரஸ் தாக்குதல்

கணினிக்கு முன்புவரை மனிதர்களை துன்புறுத்தும் வைரஸ்கள்தான் இருந்தன. தற்போது தகவல் தொழில்நுட்பத்திலும் வைரஸ் உருவாகிவிட்டது.

சாதாரணமான ஏதோ ஒரு கோப்பில் மோசடியாளர்களால் இணைக்கப்பட்ட ஒரு தீங்கிழைக்கும் குறியீடே வைரஸ். இது தவறுதலாகவும் கோப்புகளில் இடம்பெற்றிருக்கலாம். ஒருவேளை, வைரஸால் பாதிக்கப்பட்ட கோப்பு ஒரு கணினியிலிருந்து மற்றொரு கணினிக்கு அனுப்பப்படும்போது வைரஸ் பரவுகிறது. அந்த கோப்பைத் திறக்கும்போது வைரஸ் கணினியில் பரவுகிறது. அந்த வைரஸ் எப்படிப்பட்ட தன்மை கொண்டதோ, அந்த வகையில் பாதிப்பு ஏற்படும்.

வைரஸ் அடுத்து புழுக்களும் இருக்கின்றன

இந்த கணினி வார்ம் எனப்படும் புழுக்கள், வைரஸ் போல அல்லாமல் தங்களைத் தாங்களே இயக்கி, பல்வேறு கோப்புகளில் இணைத்து, அங்கிருந்து வேறு கணினிகளுக்குப் பரவும் வாய்ப்புகளையும் ஆராய்கின்றன.

வார்ம் இருக்கும் கணினிகளால் பொதுவாக நெட்வொர்க் இயக்க வேகம் குறைகிறது. ஒரு வைரஸ் இயங்க அதனை இயக்கும் புரோகிராம் தேவை, ஆனால் வார்ம் தாங்களாகவே இயங்கும்.

ட்ரோஜன் ஹார்ஸ்

ட்ரோஜன் ஹார்ஸ் என்பது ஆன்லைன் கேம் போன்ற நாம் பதிவிறக்கும் செயலிகளின் தோற்றத்தில் கணினி அல்லது செல்போனில் பதிவிறக்கம் ஆகி தீங்கிழைக்கும்.

ட்ரோஜன் ஹார்ஸ் வைரஸிலிருந்து வேறுபடுகிறது, ட்ரோஜன் மால்வேர், படக் கோப்பு, ஆடியோ கோப்பு போன்ற இயக்க முடியாத கோப்புகளுடன் இணைத்துக் கொள்ளும்.

ரான்சம்வேர்

இந்த வார்த்தையை அதிகம் செய்திகளில் கேள்விப்பட்டிருப்போம், ரான்சம்வேர் (Ransomware) ஒரு கணினி அமைப்பையோ அல்லது அதில் உள்ள தரவையோ கைப்பற்றி, பாதிக்கப்பட்டவர் பணம் செலுத்தும் வரை அதனை வைத்திருக்கும்.

பயனருக்குத் தெரியாமல் கணினியில் உள்ள தரவை குறிவைத்து நடப்பது Ransomware. கணினியில் இருந்த தரவுகளை மீட்டெடுக்க பயனர் சைபர் மோசடியாளர்களுக்கு அவர்கள் கேட்கும் தொகையை (விலை) செலுத்த வேண்டும். பணம் செலுத்தப்பட்டால்தான் அவர் மீண்டும் தனது தரவுகளைப் பயன்படுத்த முடியும்.

விளம்பர தாக்குதல்

ஆட்வேர் என்ற மால்வேர், கணினியில் நுழைந்துவிட்டால், அது தேவையற்ற விளம்பரங்கள் மற்றும் பாப்-அப்களைக் காட்டும். இந்த மால்வேர் மென்பொருள், அங்கீகரிக்கப்படாத பதிவிறக்கம், தொகுப்பு, கோப்புகளுடன் வரும் அபாயம் உள்ளது. இந்த ஆட்வேர் மூலம் கணினியில் விளம்பரங்கள் காட்டப்பட்டு, அதன் மூலம் மென்பொருளைத் தயாரித்தவருக்கு லாபம் கிடைக்கும்.

ஸ்பைவேர்

மூன்றாம் தரப்பினருக்காக கணினி அமைப்பிலிருந்து தனிப்பட்ட தகவல்களைத் திருடுவதற்காக அனுப்பப்படுவதே ஸ்பைவேர். ஒரு கணினியில் ஸ்பைவேர் நுழைந்துவிட்டால், அதிலிருந்து தகவல்களை சேகரித்து ஹேக்கருக்கு அனுப்பும்.

ரூட்கிட்

ஒரு கணினியில் மோசடியாளர்கள் உள் நுழைய பின் கதவைத் திறந்து வைக்க உதவுவதே ரூட்கிட். இது இயங்குதளத்தையே மாற்றியமைக்கிறது. பின்னர் இந்த பின் கதவு வழியாக மோடியாளர்கள் கணினியை தொலைவிலிருந்தே இயக்கி தகவல்களை திருடுவார்கள் அல்லது பயன்படுத்துகிறார்கள். மென்பொருளில் இருக்கும் பாதிப்புகள் மூலம் ரூட்கிட்கள் கணினிகளுக்குள் நுழைகின்றன.

பேக்டோர்ஸ்

ஒரு கணினிக்குள், அதன் உரிமையான பயனர் நுழைவதற்கான வழியை மூடி, மோசடியாளர்களுக்கு வழியை ஏற்படுத்தும். இதனை சரி செய்வது மிகவும் சவாலானது.

கீ-லாகர்

ஒரு கணினியில் தட்டச் செய்யப்படும் பாஸ்வேர்டு உள்ளிட்டவற்றை திருட, பயன்படுத்தப்படுவது கீ லாகர்ஸ். கீ பேடில் பதிவாகும் எழுத்துகளை கீலாகிங் புரோகிராம் மூலம் எடுத்து மோசடியாளர்களுக்கு அனுப்பும்.

ஒரு கணினி மால்வேர் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தால் அறிகுறி:

கணினியின் செயல்திறன் போன்றவை மூலம் மால்வேர் தாக்குதல்களை கண்டறியலாம்.

ஒருபக்கம் மால்வேர் செயல்படுத்துவதன் மூலம் கணினியின் வேகம் குறையும்.

ஒருவர் பார்வையிட விரும்பாத வலைத்தளத்திற்கு தானாகவே செல்ல நேரிட்டால்

மால்வேர் பாதிப்பு பற்றிய எச்சரிக்கைகள், அவற்றை எதிர்கொள்ளத் தேவையானவை பற்றிய விளம்பரங்கள்

உங்கள் கணினியைத் திறக்கும்போது அல்லது மூடும்போது சிக்கல்.

தொடர்ச்சியான பாப்-அப் விளம்பரங்கள் தோன்றுவதைக் கொண்டு மால்வேர் தாக்குதலை உறுதி செய்யலாம்.

Malware attacks are serious, so you need to be careful.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *