எடப்பாடியை சந்தித்த விஜய்: ரகசியத்தை போட்டு உடைத்த  கடம்பூர் ராஜூ – Kumudam

Spread the love

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் தவெகவில் இருந்து விலகி 500க்கும் மேற்பட்டவர்கள் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். 

இந்நிகழ்ச்சியில் பேசிய கடம்பூர் ராஜு, “மெர்சல் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. விலங்குகள் துன்புறுத்தப்படவில்லை என்ற சான்றிதழ் அளிக்கப்பட்டால் மட்டுமே படம் வெளியாகும் என்ற சூழல் ஏற்பட்டது. 

அப்போது  முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்தித்தார். தீபாவளி பண்டிகையை படம் வெளியவதால் வசூல் பாதிக்கும் விஜய் கவலைப்பட்டார். எடப்பாடியை சந்திக்க  3 மணி நேரம் உட்கார்ந்து இருந்தார். ஞாயிற்றுக்கிழமை அன்று எடப்பாடியை சந்தித்து பிரச்னையை கூறினார். 

விஜய் நேரில் வந்து கேட்கிறார் என்பதற்காக அவருக்கு உதவ வேண்டும் எனக் கூறியவர் எடப்பாடி பழனிசாமி. அவர் கூறியவுடன்  டெல்லிக்கு பேசி அதிகாரிகளை நேரில் வரவழைத்து, மெர்சல் பட பிரச்சனைக்கு இரவோடு இரவாக அதிமுக ஆட்சிக்காலத்தில் தீர்வு காணப்பட்டது. இதனால், திட்டமிட்ட தேதியில் மெர்சல் திரைப்படம் ரிலீஸானது. 

விஜய்க்கு  உதவ வேண்டியது ஆட்சியில் இருந்த எங்களின் கடமை. ஆனால் அப்போது விஜய் சொன்ன வார்த்தைகள் மிக முக்கியம். மெர்சல் பட ரிலீஸுக்கு உதவியதற்காக வாழ்நாள் முழுக்க நன்றி கடனாக இருப்பேன் என கூறினார். இப்போது விஜய் அதிமுக பெயரை உச்சரிக்கவே பயப்படுகிறார்.”.

விஜய் தொடங்கியுள்ளது  வெற்றிக் கழகம் அல்ல, வெற்று கழகம் தான். விஜய்க்கு அரசியல் வேண்டாம் என்றும் அவர் மீண்டும் நடிக்க வந்தால் அவரது படம் வெளிவர எந்த பிரச்னையும் இல்லாமல் பார்த்துக் கொள்வோம் . விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகருக்கு களநிலவரம் தெரியும் .  ஆனால் அவரது பேச்சை கேட்கும் நிலையில் விஜய் இல்லை என்றும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கடுமையாக விமர்சனம் செய்தார். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *