எடப்பாடி காலில் விழும் விஜய் ஏஐ வீடியோ: தவெக மீதான அட்டாக்கை தீவிரப்படுத்தும் அதிமுக – Kumudam

Spread the love

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா குறித்து பேசி அக்கட்சி தொண்டர்களையும், வாக்கு வங்கியையும் வசப்படுத்தும் வகையில் காய் நகர்த்துகிறார் விஜய். திமுக, பாஜகவை மட்டும் இதுநாள் வரை விமர்சனம் செய்து வந்தார் விஜய். இந்நிலையில் நேற்றைய தினம் மாமல்லபுரத்தில் தவெக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் அதிமுக ஊழல் கட்சி என விஜய் குறிப்பிட்டு பேசினார். இதற்கு பதிலடி கொடுக்கும வேலையில் அதிமுக இறங்கியுள்ளது. பனையூர் பண்ணையார் என நேற்று அதிமுக ஐடி விங்க் சார்பில் அறிக்கை வெளியிட்டு இருந்தது. இந்நிலையில், ஏஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் உலா வருகிறது. 

அதிமுக தமிழ்நாடு என்ற எக்ஸ்தள பக்கத்தில் இந்த வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்திற்கு சிக்கல் ஏற்பட்டது போலவும், அந்த சமயத்தில் முதல்வராக இருந்த எடப்பாடியை விஜய் சந்தித்து பேசுவது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. 

அதுமட்டுமின்றி மாஸ்டர் திரைப்படம் வெளியாக நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும் என எடப்பாடியிடம் விஜய் கோரிக்கை வைப்பது போலவும், நான் பார்த்து கொள்கிறேன் என விஜய் தோளை தட்டி எடப்பாடி அனுப்பி வைப்பது போன்ற காட்சிகள் உள்ளது. அதுமட்டுமின்றி, இறுதியாக எடப்பாடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அவரது காலில் விஜய் விழுவது போன்ற காட்சிகளும் அதில் உள்ளது. 

தவெக தலைவர் விஜய் கொச்சைப்படுத்தும் வகையில் வீடியோ வெளியாகி உள்ளது தவெக தொண்டர்களை கொதிப்படைய செய்துள்ளது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *