Last Updated:
ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்த நிலையில், அவரது அணியில் இருந்த வெல்லமண்டி நடராஜன், எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துள்ளார்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அணியில் இருந்துவந்த அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பில் அவர் அதிமுகவில் இணைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தர்மயுத்தம் ஆரம்பித்த காலத்தில் இருந்து அவருடன் பயணித்தவர் வெல்லமண்டி நடராஜன். இவர் தொடர்ந்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வத்துடன் பயணித்துவந்த வெல்லமண்டி நடராஜன், தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இன்று காலை ஓ. பன்னீர்செல்வம் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினைச் சந்தித்து திமுகவில் இணைந்தார். இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று வெல்லமண்டி நடராஜன் பதிவு செய்திருந்தார்.
