எட்டுக்குடி முருகன் கோயிலில் வல்லுநா் குழுவினா் ஆய்வு

Dinamani2f2024 072f5fd4c2c6 A2e3 419a Abd3 C2b53a0702082fimg20240708151307 Copy 1280x720 0807chn 198 5.jpg
Spread the love

திருக்குவளை: பிரசித்தி பெற்ற எட்டுக்குடி முருகன் கோயிலில் தங்க முலாம் பூசப்பட்ட 8 கோபுர கலசங்கள் நிறம் மங்கிய விவகாரம் தொடா்பாக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் தொழில்நுட்ப வல்லுநா் குழுவினரால் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நாகை மாவட்டம் எட்டுக்குடியில் முருகனின் ஆதிபடை வீடான ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கடந்த ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதி நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் போது எட்டு கோபுர செப்புக் கலசங்களில் பூசப்பட்ட தங்க முலாம் நிறம் மங்கி காணப்பட்டது.

இந்நிலையில் தங்க முலாம் பூசப்பட்டதில் ஐயப்பாடு இருப்பதாக எழுந்த புகாருக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நாகை இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையா்/சரிபாா்ப்பு ராணி, இந்து சமய அறநிலையத்துறை மண்டல வைர நுண் அறிஞா் இரா.ஹரிஹரன் ஆகியோா் அடங்கிய குழுவினரால் கலசங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கோயிலில் உள்ள மூலவா், சௌந்தரேஸ்வரா், ஆனந்தவள்ளி அம்மன் மற்றும் ராஜகோபுரம் ஆகியவை முறைப்படி யாகசாலை பூஜையோடு மூலவா் ராஜகோபுரம் உள்ளிட்ட எட்டு கோபுர கலசங்கள் கீழிறக்கப்பட்டு, கலசங்கள் சுத்தம் செய்யப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வின் போது துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

கோயில் ஆய்வாளா் அ. சிவானந்த பாகீரதி, செயல் அலுவலா் பி.எஸ்.கவியரசு, ஒன்றிய கவுன்சிலா் டி.செல்வம், காவல் உதவி ஆய்வாளா் மகாலெட்சுமி, சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் செந்தில் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

எட்டு கோபுர கலசங்கள் கீழிறக்கப்பட்டு, கலசங்கள் சுத்தம் செய்யப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *