எண்ணும் எழுத்தும் திட்ட முன்னேற்றம் குறித்து ​​ஆய்வு மேற்கொள்ள வேண்டும்: தொடக்க கல்வித் துறை உத்தரவு | ennum ezhuthum project progress should be reviewed

1371703
Spread the love

சென்னை: அரசுப் பள்​ளி​களில் எண்​ணும் எழுத்​தும் திட்​டத்​தின் முன்​னேற்​றம் தொடர்​பாக மாவட்​டக் கல்வி அலு​வலர்​கள் ஆய்வு மேற்​கொள்ள வேண்​டும் என்று தொடக்க கல்​வித் துறை அறி​வுறுத்​தி​யுள்​ளது.

இதுகுறித்து மாவட்ட கல்வி அதி​காரி​களுக்கு தொடக்க கல்​வித் துறை இயக்​குநர் நரேஷ் அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்கை விவரம்: தமிழகத்​தில் அரசு மற்​றும் அரசு உதவி பெறும் தொடக்​கப் பள்​ளி​களில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்​களின் அடிப்​படை கற்​றலை மேம்​படுத்​தும் நோக்​கில் எண்​ணும் எழுத்​தும் திட்​டம் செயல்​படுத்​தப்​படு​கிறது. இதுத​விர, மாநில அடைவுஆய்வு மற்​றும் அடிப்​படை கற்​றல்நிலை மதிப்​பீடு​களின் அடிப்​படை​யில், கற்​றல் இடைவெளியை குறைத்​து, ஒவ்​வொரு குழந்​தை​யும் தமிழ், ஆங்​கிலம் வாசித்​தல்திறன், அடிப்​படை கணித திறன்​களை முழு​மை​யாக கற்​ப​தற்​கான முயற்​சிகளும் மேற்​கொள்​ளப்​படு​கின்​றன.

இந்த திட்​டத்தை ஆக்​கப்​பூர்​வ​மாக செயல்​படுத்​து​வ​தில், கண்​காணிப்பு அதி​காரி​களின் பங்கு மிக​வும் முக்​கி​யம். பள்​ளி​களில் கல்வி சார்ந்த செயல்​பாடு​களை அவர்​கள் ஆய்வு செய்​யும்​போது வகுப்​பறை நடை​முறை​கள், மாணவர்​களின் வேலை புத்​தகம் பயன்​படுத்​தப்​படும் விதம், மாணவர்​களின் பங்​கேற்பு நிலை, தனிப்​பட்ட கற்​றல் வழி​காட்​டல் வழங்​கப்​படு​கிறதா என்​பதை ஆய்வு செய்​ய​வேண்​டும்.

மேலும், மாதாந்​திர, காலாண்டு மதிப்​பீடு​கள் மூலம் மாணவர்​களின் முன்​னேற்​றம் பதிவு செய்​யப்பட வேண்​டும். மாணவர்​களுக்கு பயிற்சி பயனுள்​ள​தாக இருக்​கிறதா என்​ப​தை​யும் உறு​தி​செய்ய வேண்​டும். எனவே, தங்​கள் எல்​லைக்கு உட்​பட்ட அனைத்து பள்​ளி​களுக்​கும் மாதாந்​திர அடிப்​படை​யில் பயண திட்​டங்​களை தயாரித்துஆய்வு செய்ய வேண்​டும். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *