“எதிரிகளை வீழ்த்தும் பலமான கட்சி அதிமுகதான்”- எடப்பாடி பழனிசாமி| “AIADMK is the strong party that can defeat its rivals,” said Edappadi K. Palaniswami.

Spread the love

“மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி கும்மிடிப்பூண்டியில் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், “2026-ல் அதிமுக ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது. இது ஒரு ஜனநாயகக் கட்சி. உழைப்பவர்களுக்கு இங்கு மரியாதை உண்டு. அவர்களுக்கு வீடு தேடி பதவி தருவோம்.

திமுகவில் கருணாநிதி குடும்பத்துக்கு மட்டுமே ஆட்சி அதிகாரம் கிடைக்கும்.

அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி. 8 கோடி மக்களைச் சுரண்டி ஒரு குடும்பம் வாழ்கிறது.

உதயநிதி ஸ்டாலின், மு.க. ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின், மு.க. ஸ்டாலின்

குடும்ப ஆட்சிக்கு, வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற தேர்தல் 2026 சட்டமன்றத் தேர்தல்தான்.

எதிரிகளை வீழ்த்தும் பலமான கட்சி அதிமுகதான். திமுக கூட்டணி வைத்தால் பாஜக நல்ல கட்சி. அதே நாங்கள் கூட்டணி வைத்தால் பாஜக மதவாதக் கட்சியா?

இன்ஜின் இல்லாத கார் திமுக. அதை கூட்டணி என்ற லாரி இழுக்கிறது. திமுக கூட்டணியில் புகைச்சல் தொடங்கிவிட்டது” என்று எடப்பாடி பழனிசாமி திமுக-வை விமர்சித்துப் பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *