எதிரியின் எல்லைக்கு செல்ல வேண்டாம்; 3,500 கி.மீ.பாயும் K-4 ஏவுகணை- சோதனை நடத்திய இந்தியா -பின்னணி என்ன?| India has tested the K-4 missile with a range of 3,500 km – what is the background behind it?”

Spread the love

நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து தாக்கும் வகையில் k – 4 எனும் ஏவுகணையை இந்திய பாதுகாப்புத்துறை வடிவமைத்திருக்கிறது.

அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலான “ஐ.என்.எஸ். அரிகாட்’டில் (INS Arighat) இருந்து இந்தியா, இந்த ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்திருக்கிறது.

இந்தச் சோதனை விசாகப்பட்டினம் கடற்கரையில் நேற்று (டிச. 25) நடைபெற்றது.

நீருக்கடியில் இருந்து அணு ஆயுத தாக்குதல்களை நடத்தும் திறனை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணை இந்திய கடற்படைகளுக்கு மிகவும் பேருதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

‘K-4’ ஏவுகணை

முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ‘K-4’ ஏவுகணை 12 மீட்டர் நீளமும், 17 டன் எடையும் கொண்டது.

நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. திட எரிபொருளால் இந்த ‘கே – 4’ ஏவுகணை இயங்கும் என்று கூறப்படுகிறது.

3,500 கி.மீ., துாரம் வரை சென்று இலக்கைத் தாக்கும் திறன் கொண்டது. இந்த ஏவுகணை மூலம் எதிரியின் எல்லையை நெருங்காமலேயே கடலின் ஆழமான பகுதியில் இருந்தபடி அணு ஆயுததத்தாக்குதலை நடத்த முடியும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *