எதிர்கட்சிகள் வெளிநடப்பு, நாடாளுமன்றத்தில் அமளிக்கு இடையே பிரதமர் மோடி பேச்சு – Kumudam

Spread the love

எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் பிரதமர் மோடி தொடர்ந்து உரையாற்றினார். மேலும், “என்னைப் பேச விடுங்கள்..” என அவர்களிடம் வேண்டுகோள் விடுத்து தொடர்ந்து உரையாற்றினார்.பிரதமர் மோடி பேசுகையில், “உலக நாடுகளின் பிரச்சினைகளை தீர்க்க இந்தியா வலிமைமிக்க நாடாக மாறி வருகிறது. இந்த நூற்றாண்டின் இரண்டாவது காலாண்டு இந்தியாவுடையதாக இருக்கும். வளர்ந்த இந்தியாவை நோக்கிய பயணத்தில் கடந்த ஆண்டுகள் மைல் கற்களாக அமைந்துள்ளன. 

வளர்ந்த நாடுகளில் வயதானோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உலக பொருளாதாரத்தில் 2014-ல் 11-ஆம் இடத்தில் இருந்தோம்; இன்று 3-வது இடத்தில் உள்ளோம்”.தேச நலன், அடித்தட்டு மக்களின் வளர்ச்சிகான அறிவிப்புகள் குடியரசுத் தலைவர் உரையில் உள்ளன. இந்த நூற்றாண்டின் 2ஆவது காலாண்டு இந்தியாவுடையதாக இருக்கும்; உலக நாடுகளின் பிரச்சினைகளை தீர்க்கும் வலிமைமிக்க நாடாக இந்தியா விளங்குகிறது; உலக பொருளாதாரத்தில் 2014இல் 11ஆவது இடம் இருந்தோம்; 

தற்போது 3ஆவது இடத்துக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. வளர்ந்த நாடுகளில் வயதானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு; இந்தியாவில் இளைஞர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. வளர்ந்த இந்தியாவை நோக்கிய பயணத்தில் கடந்த ஆண்டுகள் ஒரு மைல் கல். இந்தியாவின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது.

அறிவியல், விளையாட்டு என அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னேறி வருகிறது. உற்பத்திக்கான உகந்த சூழலை உருவாக்கி உள்ளோம். காங்கிரஸ் ஆட்சியில் இருந்த பிரதமர்களிடம் தொலைநோக்கு பார்வை இல்லை. நாட்டின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் எப்போதும் பணியாற்றியது இல்லை. எதிர்க்கட்சியினர் ஓடி விட முடியாது; பதில் சொல்லியே ஆக வேண்டும். கடந்த காலங்களில் காங்கிரஸ் செய்த தவறுகளை நாங்கள் செய்யவில்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.

காங்கிரஸ் கட்சிக்கு எதிர்காலத்துக்கான இலக்குகளோ அல்லது அதற்கான நோக்கங்களோ இருந்தது இல்லை. வர்த்தக ஒப்பந்தம் இளைஞர்களுக்கு பயனளிக்கும்; இந்தியாவின் வர்த்தக ஒப்பந்தத்தை உலக நாடுகள் பாராட்டுகின்றன. உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான பாதையில் இந்தியா பயணித்து வருகிறது. எதிர்காலத்தை கருத்தில் கொண்டே வர்த்தக ஒப்பந்தங்களில் புரட்சி செய்து வருகிறோம். பாஜக அரசு செய்துள்ள ஒப்பந்தத்தை போல யாராவது செய்துள்ளார்களா? உலக நாடுகளின் சந்தைகள் இந்தியாவுக்காக திறந்துள்ளன.

இந்தியா 9 நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. மேற்கு வங்கத்தில் ஊடுருவல்காரர்களை திரிணாமூல் காங்கிரஸ் பாதுகாக்கிறது. மேற்கு வங்கத்தில் மக்களின் எதிர்காலம் இருளில் உள்ளது. அதிகாரத்துக்கு வந்ததும் எதிர்க்கட்சிகள் தங்களது பைகளை நிரப்புவதிலேயே குறியாக உள்ளன. காங்கிரசின் மோசமான ஆட்சியில் ஏழைகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். எதிர்க்கட்சியினரை நாட்டின் இளைஞர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் பேசி வருகிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *