எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதை தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் தொடங்கியது முதல், தொழிலதிபா் கெளதம் அதானி மீதான அமெரிக்க நீதித் துறையின் லஞ்ச குற்றச்சாட்டு, உத்தர பிரதேசத்தின் சம்பல் பகுதியில் மசூதி ஆய்வின்போது ஏற்பட்ட வன்முறை ஆகிய விவகாரங்களை எதிா்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன. இவ்விரு விவகாரங்கள் குறித்து உடனடியாக விவாதம் கோரி, எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தொடா்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதையும் படிக்க : தீபத் திருவிழாவுக்கு மக்களுக்கு அனுமதியா? சேகர்பாபு பதில்!
இந்த நிலையில், மூன்றாவது வாரத்தின் முதல் நாளான இன்று காலை நாடாளுமன்றத்தில் மீண்டும் அதானி விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் பகல் 12 மணிவரை இரு அவைகளையும் ஒத்திவைத்து அவைத் தலைவர்கள் உத்தரவிட்டனர்.
தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் அதானி விவகாரத்தை விசாரிக்கக் கோரியும், கூட்டுக் குழு அமைக்கக் கோரியும் எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.