எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர் மூலம் குழப்பம் விளைவிப்பது ஏன்? – பாஜகவுக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி | cm stalin questions bjp over governor politics in opposition ruling state

1380246
Spread the love

சென்னை: எ​திர்க்​கட்​சிகள் ஆளும் மாநிலங்​களில், ஆளுநர்​களை வைத்​துக் குழப்​பம் விளை​வித்து என்ன சாதிக்​கப் போகிறீர்​கள் என்று பாஜகவுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கேள்வி எழுப்​பி​யுள்​ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளி​யிட்ட சமூக வலை​தளப் ​ப​தி​வில் கூறி​யிருப்​ப​தாவது: நிதி​யமைச்​சர் தங்​கம் தென்​னரசுவுக்கு மட்​டுமல்ல, நாட்டு மக்​களின் நெஞ்​சங்​களி​லும் ஏராள​மான கேள்வி​கள் நிரம்​பி​யுள்​ளன. அவற்​றில் சில​வற்றை நான் கேட்​கிறேன்.

ஊழல்​வா​தி​கள் பாஜக​வின் கூட்​ட​ணிக்கு வந்​த​பின்​பு, வாஷிங்​மிஷனில் வெளுப்​பது எப்​படி, நாட்​டின் முக்​கிய​மான திட்​டங்​களுக்​கும், சட்​டங்​களுக்​கும் இந்​தி​யிலும் சம்​ஸ்​கிருதத்​தி​லும் மட்​டுமே பெயரிடப்​படு​வது என்ன மாதிரி​யான ஆணவம்?

மூடநம்​பிக்​கை: மத்​திய அமைச்​சர்​களே நம் குழந்​தைகளை அறி​வியலுக்​குப் புறம்​பான மூடநம்​பிக்​கைகளைச் சொல்லி மட்​டுப்​படுத்​து​வது ஏன், எதிர்க்​கட்​சிகள் ஆளும் மாநிலங்​களில், ஆளுநர்​களை வைத்​துக் குழப்​பம் விளை​வித்து என்ன சாதிக்​கப் போகிறீர்​கள், பாஜக​வின் தேர்​தல் வெற்​றிக்​காக, மக்​களின் வாக்​கு​களைப் பறிக்​கும் வாக்​குத் திருட்டை எஸ்​ஐஆர் ஆதரிப்​பது ஏன்?

கீழடி அறிக்​கை​ இரும்​பின் தொன்மை குறித்து அறி​வியல்​பூர்​வ​மாகத் தமிழகம் மெய்ப்​பித்த அறிக்​கை​யைக்​கூட அங்​கீகரிக்க மனம்​வ​ராதது ஏன், கீழடி அறிக்​கை​யைத் தடுக்​கக் குட்டிக்​ கரணங்​கள் போடு​வது ஏன்?

இதற்​கெல்​லாம் பதில் வருமா இல்லை வழக்​கம்​போல, வாட்​சப் யூனிவர்​சிட்​டி​யில் பொய்ப் பிர​சா​ரத்​தைத் தொடங்​கு​வீர்​களா? இவ்​வாறு சமூக வலைதளத்தில் முதல்​வர் கேள்வி எழுப்​பி​யுள்​ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *