வெறுமனே வார்த்தைகளால் பேசுவதை விட, நாங்கள் செய்த திட்டங்களைச் சொல்லி மக்களிடம் வாக்கு கேட்கிறோம். இனி செய்யப்போகும் திட்டங்களையும் முன்வைக்கிறோம். எதிரணி வேட்பாளர் 20 ஆண்டுகளுக்கு முன்பு கோவைக்கு வந்திருக்கலாம், நான் 4-5 ஆண்டுகளுக்கு முன்பு வந்தேன். ஆனால், கடந்த சில ஆண்டுகளில் கோவையின் ஒவ்வொரு பகுதியிலும் வளர்ச்சிப் பணிகளுக்காக மக்களோடும் அதிகாரிகளோடும் நான் இணைந்து பணியாற்றியுள்ளேன். அவரை விட எனக்கு கோவை தெற்கு தொகுதியின் தேவைகள் நன்றாகத் தெரியும்.

கரூரில் இருந்து ஆட்களை அழைத்து வந்து தேர்தல் பணியாற்ற வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. கோவையில் உள்ள தி.மு.கவின் போர்ப்படை சிப்பாய்களே வெற்றியைத் தேடித்தருவார்கள். எனது பெயர் கொண்ட சுயேச்சை வேட்பாளர்கள் அதிகம் போட்டியிடுவதாக கேள்விப்பட்டேன். மக்கள் மிகவும் தெளிவானவர்கள். சின்னத்தைப் பார்த்து வாக்களிக்கும் விழிப்புணர்வு அவர்களிடம் உள்ளது.
100 பேர் ஒரே பெயரில் நின்றாலும் உதயசூரியன் சின்னம் எது என்பது மக்களுக்குத் தெரியும். கோவை தெற்கு தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு ஒரு சகோதரனாக, ஊழியனாக இருந்து பணியாற்றுவேன். அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகளை ஒரு வருட காலத்திற்குள் நிறைவேற்ற முழு முயற்சி எடுப்பேன்” என்றார்.