இந்த நிலையில், தில்லி இன்று நடைபெற்ற இந்தியா கூட்டணி கூட்டத்தில் இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலர் வேணுகோபால், காங்கிரஸின் மல்லிகார்ஜுன கார்கே, சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸின் சுப்ரியா சுலே, ராம் கோபால் யாதவ், திரிணமூல் காங்கிரஸின் கல்யாண் பானர்ஜி, ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தமிழகத்திலிருந்து திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, கனிமொழி, ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மனோஜ் குமார் ஜா, மாக்ஸிய கம்யூனிஸ்டின் ஜான் பிரிட்டாஸ், இந்திய கம்யூனிஸ்டின் சந்தோஷ் குமார், என்.கே.பிரேமச்சந்திரன், வைகோ ஆகியோரும் விவாதத்தில் கலந்து கொண்டனர்.
இதுபற்றி காங்கிரஸ் பொதுச் செயலர் வேணுகோபால் கூறுகையில், “ஒத்த கருத்துடைய, இந்த மசோதாவுக்கு எதிராக உள்ள அனைவரும் வாக்களிக்க இருக்கிறோம். மேலும், இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக இந்த மசோதாவை எதிர்த்து அனைவரும் வாக்களிக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: சிஎஸ்கே – தில்லி போட்டி: டிக்கெட் விற்பனை! கிரிக்கெட் ரசிகர்கள் கவனிக்க..!