எதிர்நீச்சல் தொடரில் ரிதன்யா தற்கொலை விவகாரம்: இயக்குநருக்கு குவியும் பாராட்டு!

dinamani2F2025 07 152F5cnjdctg2Fthiruselvam1aa
Spread the love

அவிநாசியில் புதுமணப் பெண் ரிதன்யா, வரதட்சிணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து எதிர்நீச்சல் -2 தொடரில் பேசப்பட்டதால், இத்தொடரின் இயக்குநர் திருச்செல்வத்துக்கு ரசிகர்கள் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் 2 தொடரை இயக்குநர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். எதிர்நீச்சல் முதல் பாகத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் தொடர்ச்சியாக ஒளிபரப்பாகி வருகிறது.

முதல்பாகத்தில் மதுமிதா நாயகியாக நடித்திருந்த நிலையில், அவருக்குப் பதிலாக இரண்டாம் பாகத்தில் பார்வதி நடித்து வருகிறார்.

மேலும் வேல ராமமூர்த்தி, கனிகா, திவ்யதர்ஷினி, ஹரிப்பிரியா இசை, கமலேஷ், விபு ராமன் ஆகியோர் 2ஆம் பாகத்திலும் தொடர்கின்றனர்.

ஆணாதிக்க குணம் கொண்டவர்கள் உள்ள குடும்பத்தில் வாழும் பெண்கள் எவ்வாறு முன்னேறுகிறார்கள் என்பதை மையப்படுத்தியும் ஆண்களின் பிற்போக்குத் தனங்களை எடுத்துக்காட்டியும் இத்தொடர் எடுக்கப்படுகிறது.

இதனிடையே, எதிர்நீச்சல் – 2 தொடரின் கதைக்காட்சியில் வரதட்சிணைப் பிரச்னையால் இறந்த ரிதன்யாவுக்காக பெண்கள் போராட வேண்டும் என்று ஆவேசத்துடன் இயக்குநர் திருச்செல்வம் பேசியது இணையத்தில் வைரலாகியுள்ளது.

”பெண்கள் தைரியமாக போராட வேண்டும், தற்கொலை செய்யக்கூடாது” என்று அவர் பேசியது பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க: ரஜினியிடம் கதை சொன்ன நித்திலன்!

Fans are praising the series’ director, Thiruchelvan, as the incident in which a newlywed girl, Rithanya, committed suicide due to dowry harassment in Avinashi was discussed in the series edhirneechal-2.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *