எதிர்நீச்சல் தொடர்கிறது!.. வெளியானது முன்னோட்டக் காட்சி!

Dinamani2f2024 12 092fg00xexra2fethirneechal 2 Serial Actress Edi.jpg
Spread the love

எதிர்நீச்சல் தொடரின் இரண்டாம் பாகம் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. இது தொடர்பான முன்னோட்ட விடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.

எதிர்நீச்சல் தொடரின் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகவுள்ளது.

எதிர்நீச்சல் தொடரில் ஜனனி என்ற பாத்திரத்தில் நடிகை மதுமிதா நடித்திருந்தார். தற்போது இரண்டாவது பாகத்தில், பார்வதி வெங்கட்ராமன் நடிக்கவுள்ளார்.

நடிகை மதுமிதா, அய்யனார் துணை என்ற புதிய தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதால், எதிர்நீச்சல் 2ஆம் பாகத்தில் பார்வதி நடிக்கிறார்.

எதிர்நீச்சல் தொடரின் முதல் பாகத்தில் இருந்த கனிகா, திவ்யதர்ஷினி, ஹரிபிரியா இசை ஆகியோர் 2ஆம் பாகத்திலும் தொடர்கின்றனர்.

இது தொடர்பாக வெளியாகியுள்ள முன்னோட்ட விடியோவில், கனிகா, திவ்யதர்ஷினி, ஹரிபிரியா இசை ஆகியோர் தோன்றுகின்றனர்.

‘அதே நம்பிக்கையோட, அதே வேகத்தோட, உங்களைப் பார்க்க வருகிறோம்’ என்று முன்னோட்டக் காட்சி வெளியாகியுள்ளது. இதில் ஜனனியாக மதுமிதாவுக்கு பதிலாக பார்வதி தோன்றுகிறார்.

இது தொடர்பாக வெளியான மற்றொரு விடியோவில், எதிர்நீச்சல் இயக்குநர் திருச்செல்வம் பேசுகிறார். அதில், உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் பதில் எழுதிக்கொண்டிருப்பதாகவும், எதிர்நீச்சல் தொடர்கிறது எனவும் குறிப்பிடுகிறார்.

இதனால் எதிர்நீச்சல் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும், மதுமிதாவுக்கு பதிலாக பார்வதி நல்ல தேர்வு எனவும் ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *