டொனால்ட் டிரம்ப் அதிபராக பதவியேற்பு விழாவுக்கான நன்கொடையின் மதிப்பு, எதிர்பார்த்ததைவிட அதிகளவில் கிடைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில், அதிபராக ஜனவரி 20 ஆம் தேதியில் வெள்ளை மாளிகையில் பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழாவுக்காக, பல தொழிலதிபர்களும் நன்கொடை அளித்து வருகின்றனர். இந்த விழாவுக்கான நிதி சேகரிப்பு 150 மில்லியன் டாலர் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இதுவரையில் 150 மில்லியன் டாலரையும் விஞ்சியுள்ளது. அதுமட்டுமின்றி, தொழிலதிபர்கள் பலரும் போட்டி போட்டுக்கொண்டு, நன்கொடை அளித்து வருவதால், நிதி சேகரிப்பு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரையிலான அமெரிக்க வரலாற்றில், பதவியேற்புக்கான நிதி சேகரிப்பில் டிரம்ப்புக்குதான் அதிகளவில் நன்கொடை பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.