இந்த நிலையில் அர்ஜித் சிங் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “அனைவருக்கும் வணக்கம், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். இத்தனை ஆண்டுகளாக ரசிகர்களாக எனக்கு நீங்கள் அளித்த அளவற்ற அன்பிற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
இனிமேல் பின்னணிப் பாடகராக நான் எந்தப் புதிய பணிகளையும் ஏற்கப்போவதில்லை என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். இதோடு நான் விடைபெறுகிறேன். இது ஒரு அற்புதமான பயணம்” என அறிவித்திருக்கிறார்.
அவரின் இந்த முடிவு, அவரின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.