சாதம், பிரெட், காய்கறி, பழங்கள், குளிர்பானங்கள் என நாம் உட்கொள்ளும் எந்த ஓர் உணவிலும் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில், கார்போஹைட்ரேட் என்றாலே உடலுக்குக் கெடுதி என்ற எண்ணம் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது.
கார்போஹைட்ரேட் என்றால் என்ன, எது நல்ல கார்போஹைட்ரேட், எது கெட்ட கார்போஹைட்ரேட் என்று தெரிந்துகொண்டால், இந்த தவறான எண்ணம் மறையும்; உணவுப் பழக்கத்தையும் மாற்றிக்கொள்ளலாம்.

நல்ல கார்போஹைட்ரேட் அல்லது மாவுச்சத்து எனப்படுவது, காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட். இதன் ரசாயனக் கட்டமைப்பு மற்றும் நார்ச்சத்து போன்றவை காரணமாக, நம்முடைய செரிமான மண்டலமானது இதைச் செரிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது. இதனால், கலோரியானது நீண்ட நேரத்துக்கு வெளியாகிறது.