“தினமும் காலையில சமைச்சு, பிள்ளைகளுக்கு கொடுத்துட்டு வேலைக்கு வந்துருவேன். என் வீட்டுக்காரர் ராணியை இறக்கி விடுற மாதிரி வந்து ஆட்டோல இறக்கி விட்டுப்போவாரு. என் வேலையில நான் யாரையும் குறை சொல்லமாட்டேன். மக்கள் குப்பையை பிரிச்சு போடலனாக்கூட நான் பிரிப்பேன். எரிச்சல் படமாட்டேன். குப்பையா கெடக்குற தெருவை, கூட்டி சுத்தம் செஞ்சு, திரும்பி பார்க்கும் போது ஒரு சந்தோஷம் கிடைக்கும் பாருங்க. அந்த நிறைவு போதும்” என்ற பத்மா அக்காவிடம், நகையை மீட்டது பற்றிக் கேட்டோம்.
“நிறைய பேர் எங்களுக்கு சாப்பாடு தருவாங்கம்மா. சிலர் எங்க கையில கொடுக்க சங்கடப்பட்டுகிட்டு ரோட்டுல ஓரமா வெச்சுட்டுப் போவாங்க. அன்னைக்கும் ஒரு பை அப்படித்தான் இருந்துச்சு. சாப்பாடு இருக்குனு நினைச்சு அந்தப் பையை நான் எடுத்துட்டு கிளம்பிட்டேன். ஆட்டோல ஏறி பார்த்தேன். பை முழுக்க நகை இருந்துச்சு. சாப்பாடு இல்லையேனு ஏமாற்றம் ஒரு பக்கம். இம்புட்டு நகையை யாரு விட்டதுனு பயம், பதட்டம் ஒரு பக்கம்.