“எனக்கு ரொம்ப பிடிச்ச தமிழ் சினிமாவுல 25 வருஷம் கழிச்சு ஒரு படம் பண்ணியிருக்கேன்!” – ‘பூவே உனக்காக’ சங்கீதா! |”I’ve made a film in Tamil cinema that I really like after 25 years!” – Sangeetha

Spread the love

இந்த விழாவில் பேசிய நடிகை சங்கீதா பேசுகையில், “இங்கு எல்லோரையும்விட நான்தான் சந்தோஷமாக இருக்கேன். ஏன்னா, எனக்கு ரொம்ப பிடிச்ச தமிழ் சினிமாவுல 25 வருஷம் கழிச்சு ஒரு படம் பண்ணியிருக்கேன்.

இத்தனை வருஷம் வீட்டுல கம்போர்டாக இருந்து பழகிட்டேன். ஆனா, அதுல இருந்து வெளில வரணும். மீண்டும் நடிக்க வரும்போது, தயாரிப்பாளர்கள் எனக்கு எவ்வித அசௌகரியங்களையும் ஏற்படுத்தல.

இந்தப் படத்தோட போட்டோஷூட்டுக்கு முதல் முறையாக வரும்போது இறுக்கமாகவேதான் வந்தேன்.

'Poove Unakaaga' Sangeetha

‘Poove Unakaaga’ Sangeetha

எல்லோருமே எனக்கு சீனியர்ஸாகதான் தெரிவாங்க. படத்தின் லாஸ்ட் ஷாட் எடுக்கும்போது, பரத், ‘எனக்கு பஸ்ஸுக்கு டைம் ஆகுது’னு சொல்லிட்டு இருந்தாரு, நான் பஸ்ஸுக்கு லேட் ஆகுதானு சந்தேகத்தோட கேட்டேன்.

அவர், ‘ஆமா, எனக்கு நாளைக்கு கிரிக்கெட் மேட்ச் இருக்கு. பஸ்ல போய் கோயம்பேடுல இறங்கி, வீட்டுக்குப் போயிடுவேன்’னு சொன்னாரு. அந்தளவுக்கு டவுன் டு எர்த் பர்சன் அவர். எனக்கு இது முதல் படம் மாதிரியான ஃபீல்தான் கொடுக்குது.” என்றார்.

இவரிடம் இத்தனை ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் இருந்ததற்கான காரணத்தை தொகுப்பாளர் கேட்டார். இதற்கு பதில் தந்தவர், “நான் எங்கேயும் போகல. நான் சினிமாவுலதான் இருந்தேன். என் கணவர் சினிமாவுல இருந்ததுனால எனக்கும் சினிமாவை விட்டு போன மாதிரி ஃபீலிங் இல்ல. கொஞ்சம் வீட்டு வேலைகள் அதிகமாக இருந்ததுனால, லேட்டாக வந்திருக்கேன்.” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *