எனது காரை மறித்தது திட்டமிட்ட சதி; பின்னணியில் பாஜக உள்ளது: திருமாவளவன் | My car was blocked BJP is behind it Thirumavalavan alleges

1379324
Spread the love

சென்னை: உயர் நீதிமன்றம் அருகே எனது காரை வழிமறித்த நிகழ்வு தற்செயலாக நடந்தது அல்ல; திட்டமிட்டசதி. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் இதன் பின்னணியில் உள்ளனர் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘உயர் நீதிமன்றம் அருகே தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்பு கடந்த அக்டோபர் 7 அன்று எனது காரை வழிமறித்த நிகழ்வு ‘தற்செயலாக நடந்தது அல்ல; திட்டமிட்டசதி’ என்பது தெரியவருகிறது.

ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் இதன் பின்னணியில் உள்ளனர் என்றும் எமது விசாரணையில் உறுதிபட தெரிகிறது. எனவே, தமிழ்நாடு அரசு இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரித்திட வேண்டும். பின்னணியில் உள்ள சதியினைக் கண்டறிய வேண்டும்.

அத்துடன், உடனடியாக இதனை ஒளிபரப்பு செய்த தனியார் தொலைக்காட்சிகளை சார்ந்தவர்களையும் முழுமையாக அய்யமற விசாரித்திட வேண்டுமென கோருகிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய் மீது காலணியை வீச முயன்ற வழக்​கறிஞர் ராகேஷ் கிஷோர் மீது வன்​கொடுமை தடுப்​புச் சட்​டம் உள்​ளிட்ட பிரிவு​களின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்​தி, சென்னை உயர் நீதி​ன்றம் அருகே வழக்​கறிஞர்​கள் அண்மையில் ஆர்ப்​பாட்​டம் நடத்தினர்.

இதில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்று திரும்பியபோது, அந்த வழி​யாக சென்று கொண்​டிருந்த ஸ்கூட்டர் மீது திரு​மாவளவன் சென்ற கார் மோது​வது​போல் சென்​றுள்​ளது. இதையடுத்​து இருசக்கர வாகனத்​தில் சென்ற நபர், அவரது வாக​னத்தை நிறுத்​தி​விட்​டு, ஏன் இப்​படி காரை அஜாக்​கிரதை​யாக ஓட்டி வரு​கிறீர்​கள் என கண்​டித்​துள்​ளார். இதையடுத்​து, இரு தரப்பினருக்கும் தகராறு, கைகலப்பு ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து ஏற்கெனவே ஊடகங்களில் திருமாவளவன் விளக்கமளித்தார். இந்நிலையில், இன்று தனது எக்ஸ் பக்கத்தில் உயர் நீதிமன்றம் அருகே எனது காரை வழிமறித்த நிகழ்வு தற்செயலாக நடந்தது அல்ல; திட்டமிட்ட சதி. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் இதன் பின்னணியில் உள்ளனர் எனத் தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *