என்எல்சி சுரங்கத்தில் மண் வெட்டும் இயந்திரம் மோதி தொழிலாளி உயிரிழப்பு | Worker dies after being hit by earth-moving machine at NLC mine

1291237.jpg
Spread the love

கடலூர்: என்எல்சி சுரங்கத்தில் மண் வெட்டும் இயந்திரம் மோதி தொழிலாளி உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் வடலூர் சித்த நகரை சேர்ந்தவர் அம்மாவாசை மகன் குழந்தைவேல் (36). இவர் என்எல்சி சுரங்கம் 1ஏ-யில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று (ஆக.5) சுரங்கம் 1ஏ-யில் இரவு பணிக்கு சென்றுள்ளார்.

இன்று (ஆக.6 )காலை பணிக்கு வந்தவர்கள் பார்த்தபோது குழந்தைவேல் கன்வேயர் பெல்ட் அருகே டோசர் இயந்திரம் மோதி உயிரிழந்து கிடந்தார். இது குறித்த தகவல் அறிந்த நெய்வேலி நகர போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி என்எல்சி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *