என்எல்சி நிர்வாகம் – ஒப்பந்த தொழிலாளர் விவகாரம்: பேச்சுவார்த்தை குழுவை அணுக உத்தரவு | NLC Administration Contract Labor Issue Order to Approach Negotiating Committee

1334586.jpg
Spread the love

சென்னை: என்எல்சியில் வேலை பார்த்து வரும் ஒப்பந்த தொழிலாளர்கள், பணி நிரந்தரம் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.

என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் இந்த அறிவிப்பை எதிர்த்து என்எல்சி நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. சென்னை உயர் நீதிமன்றம், “இந்த விவகாரம் தொடர்பாக மத்திய தொழில் தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள என்எல்சி நிர்வாகம் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் இடையேயான பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில், 6 மாதங்களில் உயர்மட்டக் குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டும்” என உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து என்எல்சி நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், எம்.ஜோதிராமன் ஆகியோர் கொண்ட அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, என்எல்சி நிர்வாகம்சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “தனி நீதிபதியின் உத்தரவை ரத்துசெய்ய வேண்டும். தொழிலாளர்கள் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்” என்றார்.

இதையடுத்து, “இந்த பிரச்சினை தொடர்பாக இரு தரப்பும் பேச்சுவார்த்தை குழுவைஅணுக வேண்டும். அதுவரை தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது. மேல்முறையீட்டு மனுவுக்கு ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் பதில் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 13-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *