என்எல்சி நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி: +2 முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

dinamani2Fimport2F20162F42F162F182Foriginal2FNLC
Spread the love

கடலூர் மாவட்டத்தில் உள்ள இந்திய அரசு பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்எல்சி) நிறுவனத்தில் தொழில்பழகுநர் சட்டம்-1961 இன் விதிகளுக்குட்பட்டு எம்எல்டிி, கன்வேயர் பெல்ட் வல்கனைசர் போன்ற தொழில்பழகுநர் பயிற்சிகளுக்கு பிளஸ் 2 முடித்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது பற்றிய விபரம் வருமாறு:

அறிவிப்பு எண். : L&DC/02A/2025

பணி: Medical Lab Technician (Pathology)

காலியிடங்கள் : 15

தகுதி: அறிவியல் பாடத்தில் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Medical Lab Technician (Radiology)

காலியிடங்கள் : 10

தகுதி: அறிவியல் பாடத்தில் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Conveyor Belt Vulcaniser (Male Only)

காலியிடங்கள்: 20

தகுதி : +2 தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : மேற்கண்ட பணிகளுக்கு 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

உதவித்தொகை: பயிற்சியின் போது உதவித் தொகையாக முதலாம் ஆண்டு மாதம் ரூ.8,766, இரண்டாம் ஆண்டு மூன்று மாதங்களுக்கு மாதம் ரூ.10,019 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண் மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தில் 14.8.2025 தேதிக்குள் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட் எடுத்து, அதனை கையொப்பமிட்டு, அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து 20.8.2025-க்குள் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

பொது மேலாளர், கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம், என்.எல்.சி. இந்தியா நிறுவனம், வட்டம் – 20, நெய்வேலி -607803.

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர் பணி: விண்ணப்பிக்க இன்றே கடைசி!

Engagement of Apprentices Fresher MLT Pathology and Radiology, Optional Trade

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *