“என்டிஏ கூட்டணி முதல் திருப்பரங்குன்றம் விவகாரம் வரை” – அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் | “From NDA alliance to Thiruparankundram issue” – AIADMK General Committee Resolutions

Spread the love

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சென்னை வானகரத்தில் உள்ள தனி​யார் மண்​டபத்தில் அ.தி​.மு.க பொதுக்​குழு மற்​றும் செயற்​குழு கூட்​டம் இன்று நடை​பெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், சட்​டமன்றத் தேர்​தல் குறித்​தும், தி.மு.க அரசுக்கு எதி​ராக பிரச்​சா​ரங்​களை முன்னெடுப்பது குறித்தும் பல அறி​விப்​பு​கள் வெளி​யிடப்பட உள்​ளன.

இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி. உதயகுமார் உரையாற்றி தீர்மானத்தை வாசித்தார். அவரின் உரையில், “கழகத்தின் நிரந்தர பொது செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி அவர்களின் பாதம் பணிந்து வணங்கி என் உரையைத் தொடங்குகிறேன்.

அதிமுக பொதுக்குழு கூட்டம்

அதிமுக பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாட்டு மக்களுடைய நல்லாட்சியோடு நான்கரை ஆண்டு காலம் எதிர்ப்புகளுக்கும், துரோகங்களுக்கும் மத்தியிலே பொற்கால ஆட்சியை நடத்தியவர் எடப்பாடி. இன்றைக்கு தமிழகத்தில் தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கின்ற சர்வாதிகாரத்தை எதிர்த்து “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்கிற பயணத்தை தொடங்கி, இதுவரை 175 சட்டமன்ற தொகுதிகளில் ஒரு கோடி மக்களை நேரிலே சந்தித்தவர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *