நடிகர் மோகன்லாலின் தாயார் சாந்தாகுமாரி இயற்கை எய்தியிருக்கிறார். 90 வயதான இவர் வயது மூப்பு காரணமாக நேற்றைய தினம் கேரளா, கொச்சியிலுள்ள அவருடைய இல்லத்தில் காலமானார்.
மோகன்லாலின் தாயாரின் மறைவுக்கு மலையாள திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மோகன்லாலுக்கு நெருக்கமானவரும், இயக்குநருமான மேஜர் ரவி, மோகன்லாலின் தாயார் சாந்தா குறித்து மனோரமா ஊடகத்திடம் பேசியிருக்கிறார்.
அவர், “லாலின் அம்மா இறந்த செய்தியைக் கேட்டதும் என்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
அழுதுகொண்டே மோகன்லாலைப் பார்க்கப் போனேன். அவரும் உடைந்து போயிருந்தார். அவரது கண்களில் ஆழமான துக்கம் தெரிந்தது.
ஆனால் அதைக் கட்டுப்படுத்திக்கொண்டு எல்லோரையும் சந்தித்துக்கொண்டிருக்கிறார்.