“என்னுடைய என்ட்ரி எப்படி இருந்ததோ அதே மாதிரி நல்ல மரியாதையோட அனுப்பி வச்சிருக்காங்க” -நடிகை சுபிக்ஷா | actress subiksha quit from veera serial

Spread the love

“வீரா’ சீரியலில் இருந்து நடிகை சுபிக்ஷா வெளியேறி இருக்கிறார்.

நடிகை வைஷ்ணவி அருள்மொழி, அருண், உள்ளீட்ட நடிகர் நடிகைகள் நடிக்க ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி சீரியல் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது இந்த தொடர்.

வைஷ்ணவி – அருண் ஜோடிக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவானது.

வைஷ்ணவிக்கு நிகராக இந்த தொடரில் முக்கியத்துவம் வாய்ந்த இன்னொரு கேரக்டர் கண்மணி. நடிகை சுபிக்ஷா இந்தக் கேரக்டரில் நடித்து வந்தார்.

கடந்த சில தினங்களாக இந்தத் தொடரின் கதை விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் சுபிக்ஷாவின் கேரக்டர் திடீரென முடியப் போவதாக தகவல்கள் உலா வந்தன.

வீரா சீரியலில் வைஷ்ணவி அருள்மொழி

வீரா சீரியலில் வைஷ்ணவி அருள்மொழி
Photo: Vikatan/ S.Balasubramanian

ஆனால் சிலரோ கேரக்டர் முடியப் போவதாக சொல்வது உறுதியான தகவலா எனத் தெரியவில்லை, ஆனால் சுபிக்ஷா தொடரிலிருந்து வெளியேறுவது மட்டும் உண்மை என்றனர்.

அப்படியெனில், சுபிக்ஷாவுக்குப் பதில் வேறு நடிகை அந்தத் தொடரில் கமிட் ஆவாரா என்றும் சந்தேகம் எழ, சுபிக்ஷாவிடமே கேட்டு விடலாமென அவரைத் தொடர்பு கொண்டு பேசினோம்.

”ஆமாங்க. ‘வீரா’ சீரியலில் என் பயணம் முடியறது நிஜம்தான். அந்தக் கேரக்டரே முடிவடையப் போகுது.. இப்ப எனக்கு நிறைய சினிமா மற்றும் வெப் சீரிஸ் வாய்ப்புகள் வரத் தொடங்கியிருக்குது. யோகிபாபு சாருக்கு ஜோடியா நான் நடிச்ச படம் ரிலீசுக்கு ரெடியா இருக்கு. அதனால தொடர்ந்து சினிமா மற்றும் வெப் சீரிஸ் பக்கம் கவனம் செலுத்தலாம்னு தோணுச்சு. அதனால சேனல் மற்றும் தயாரிப்பு தரப்பில் பேசி நானும் அவங்களுமே பரஸ்பரம் சம்மதத்துடன் என்னுடைய கேரக்டர் முடிக்கப்படுது.

இந்த சீரியல் எனக்கு நல்ல பெயரை வாங்கித் தந்ததோட நிறைய நண்பர்களையும் கொடுத்ததுனு சொல்வேன். சீரியலில் என்னுடைய என்ட்ரி எப்படி இருந்ததோ அதே மாதிரி நல்ல மரியாதையோட அனுப்பி வச்சிருக்காங்க” என்கிறார் இவர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *